அதிமுகவுக்கு ஓபிஎஸ் வரலாம்.. இது அண்ணன் - தம்பி சண்டை தாங்க - செல்லூர் ராஜு கொடுத்த சிக்னல்!

By Raghupati RFirst Published Jul 22, 2022, 2:38 PM IST
Highlights

இரட்டை குதிரையில் சவாரி செய்தால் அதிமுகவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் ஒரு சேர முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஆக்கி உள்ளோம்.

மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாக்குடி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் சிக்கந்தர் சாவடி அரசு நடுநிலைப்பள்ளி நீண்ட நாளாக பழுதடைந்து இருப்பதாக புதிய கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு சட்டமன்ற நிதியிலிருந்து சுமார் 28 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, ‘திமுக ஆட்சியில் மக்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மக்களிடம் வாக்கு கேட்காமலே அமோக வெற்றி பெறும். அந்த அளவுக்கு திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசு விழாவில் அதிகாரியை மிரட்டுகிறார். இதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சியில் அதிகாரிகளை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றத்தை எடுத்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒற்றை தலைமை வேண்டும். 

இரட்டை குதிரையில் சவாரி செய்தால் அதிமுகவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் ஒரு சேர முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஆக்கி உள்ளோம். என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா. 

மேலும் செய்திகளுக்கு..20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி ரெய்டு.. கலக்கத்தில் அதிமுக முக்கிய புள்ளிகள் !

தற்போது அதிமுகவை விட்டு விலகி இருக்கும் ஓ பன்னீர்செல்வம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டு இருப்பது அண்ணன், தம்பி சண்டை ஆகும்.

கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்படுத்தக்கூடிய உடன்பாடாகும் அதிமுக கூட்டணியைபொறுத்த வரை அந்தக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் கேட்கும் தொகுதி எண்ணிக்கையை பொருத்து அந்த நேரத்தில் முடிவு செய்யப்பட்டு எங்கள் கூட்டணியில் எந்த கட்சிகள் இடம் பெறும் என்பது முடிவு செய்யப்படும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

click me!