போராட்டம் நடத்தனுமா கர்நாடகா, குஜராத்தை கண்டித்து நடத்துங்க.. அண்ணாமலையை எகிறி அடித்த செந்தில் பாலாஜி.

Published : Jul 22, 2022, 01:32 PM ISTUpdated : Jul 22, 2022, 01:36 PM IST
போராட்டம் நடத்தனுமா கர்நாடகா, குஜராத்தை கண்டித்து நடத்துங்க.. அண்ணாமலையை எகிறி அடித்த செந்தில் பாலாஜி.

சுருக்கம்

தமிழக பாஜக போராட்டம் நடத்த வேண்டுமென்றால் கர்நாடகா மற்றும் குஜராத்தை கண்டித்துதான் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக போராட்டம் நடத்த வேண்டுமென்றால் கர்நாடகா மற்றும் குஜராத்தை கண்டித்துதான் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏன் தமிழக பாஜக போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக்  கண்டித்து பாஜக போராட்டம் அறிவித்துள்ள நிலையில் செந்தில்பாலாஜி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை புளியந்தோப்பில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்துக்கு சொந்தமான துணை மின் நிலையத்தில் அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அவர்களை எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட மின் நிலையங்கள் மீண்டும் பாதிக்கப்படாதவாறு மேம்படுத்தப்பட்டு வருகிறது. திருவிக நகரில் மட்டும் 40 கோடி ரூபாய் 110 KV மின் நிலையம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படியுங்கள்: திரௌபதி முர்மு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாக பார்க்கக்கூடாது. ஆளுநர் தமிழிசை.

கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக கோளாறு காரணமாக மின்சாரத்துறையில் கடன் அதிகரித்துள்ளது, கடந்த பத்தாண்டுகளில் மின்துறையில் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என நான் கேள்வி எழுப்புகிறேன் என்றார். 

அதிமுக ஆட்சி மின் கட்டணம் உயரவில்லை என கூறுகிறார்கள் ஆனால் 2012, 2013, 2014 தொடர்ந்து 37 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார், தற்போது அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறுதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைந்த அளவில் மின் கட்டணம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

பாஜகவினர் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் மின்கட்டணம் அதிகமாக உள்ள கர்நாடகா மற்றும் குஜராத்தை கண்டித்துதான் போராட்டம் நடத்த வேண்டும் என்றார், கடந்த அதிமுக அரசின் நிர்வாகச் சீர்கேடும் மத்திய அரசின் அழுத்தம் தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்ற அவர், மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவதாக கூறும் பாஜக ஏன் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்: பள்ளியில் சூறையாடப்பட்ட பொருட்கள்..!தண்டோரா மூலம் எச்சரிக்கை..நள்ளிரவில் சாலையில் வீசி சென்ற கிராம மக்கள்..

கடந்த அதிமுக ஆட்சியின்போது சொந்த மின் உற்பத்தி திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தப்படவில்லை, பெரும்பாலும் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது, அப்படியிருக்க எப்படி மின்மிகை மாநிலம் என்று சொல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!