புதிய குடியரசு தலைவர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டார் என நம்புகிறேன்.. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.

By Ezhilarasan BabuFirst Published Jul 22, 2022, 12:31 PM IST
Highlights

புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டார் என நம்புவதாக புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டார் என நம்புவதாக புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சாராய ஆலை ஓடுகிறது என்றும், மேலும் 6 மதுபான ஆலைகள் அமைக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக துரோபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட யஷ்வந்த் சின்காவை காட்டிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முர்மு வெற்றி பெற்றுள்ளார். இதில் நாடு முழுவதும் அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். நேரடியாக அவரது இல்லத்துக்குச் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முர்மு குறித்து பலரும் பல வகையில் இது குறித்து கருத்து கூறி வரும் நிலையில் புதுச்சேரி மாநில  முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி திரௌவபதி முர்மு ரப்பர்  ஸ்டாம்பு குடியரசுத்தலைவராக இருக்கமாட்டார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  கள்ளக்குறிச்சி மாணவி உடல் தகனம்; ஶ்ரீமதி தந்தைக்கு நாளை காலை வரை கெடு விதித்த உயர் நீதிமன்றம்

புதுச்சேரியில் இன்று செய்தியாளர் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:- மத்திய அரசு கண்மூடித்தனமாக தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விதித்து வருகிறது, ஏழை எளிய மக்களையும், நடுத்தர மக்களையும் இந்த வரி மிகக் கடுமையாக பாதித்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதால் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்,

இதையும் படியுங்கள்: தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்? எவ்வாறு மூவர்ணக் கொடி உருவானது?

இதை ஏற்றுக்கொள்ள முடியாது, உணவுப் பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், மோடி அரசு ஒருபோதும் ஏழைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை உலக பணக்காரர்களின் வரிசையில் அதானே 4-வது இடத்தில் அதானி உள்ளார் மோடி செய்த சலுகைகளால் மட்டுமே அவர்கள் இந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது.

புதுச்சேரியில் இப்போது சாராய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது, 5 மதுபான ஆலைகள் புதுச்சேரியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் புதிய மதுபான தொழிற்சாலைகள் அமைக்க  உரிமம் கோரப்பட்டுள்ளது, 15 கோடி ரூபாய் அதற்கு பேரம் பேசப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மதுபான ஆலைகள் புதுச்சேரியில் அமைய இருக்கிறது,

அது அமைந்தால் புதுச்சேரி சாராய கடலாக மாறும், நிச்சயம் இதை எதிர்த்து காங்கிரஸ் நீதிமன்றம் செல்லும், மாநிலத்தில் மதுபானம் அதிகரித்தால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும், தினமும் கொலை கொள்ளைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உள்ளது, ஆட்சியாளர்கள் இதற்கு பொறுப்பேற்று  உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!