உங்க நாடக கம்பெனி வேலையெல்லாம் நாடாளுமன்றத்தில் காட்டாதீங்க.. திமுகவை ஓங்கி குத்திய அண்ணாமலை.

Published : Jul 22, 2022, 06:44 PM ISTUpdated : Jul 22, 2022, 06:51 PM IST
உங்க நாடக கம்பெனி வேலையெல்லாம் நாடாளுமன்றத்தில் காட்டாதீங்க.. திமுகவை ஓங்கி குத்திய அண்ணாமலை.

சுருக்கம்

நாடாளுமன்றத்தையும் நாடக மன்றம் ஆக்காதீர்கள் என திமுகவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

நாடாளுமன்றத்தையும் நாடக மன்றம் ஆக்காதீர்கள் என திமுகவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- நாடகம் மற்றும் திரைப்பட வசனகர்த்தா அண்ணாதுரை அவர்களாலும் திரைப்பட நடிகர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களாலும், திரைப்பட வசனகர்த்தா தயாரிப்பாளருமான கருணாநிதி அவர்களாலும் திரைப்படங்களால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகமும் சினிமா திரைக்கதை பாணியிலேயே இன்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது.

தன் திரைப்பட நாடக வசனங்களை காட்டி மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு நாடகம் புதுடெல்லியில் அரங்கேறியிருக்கிறது.  நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் போனதாக ஒரு போலியான குற்றச்சாட்டை முன்னிறுத்தி, பாராளுமன்றத்தில் பரபரப்பு தேடுகிறது திமுக.

பட்டியலின பழங்குடி இனத்தின் பிரதிநிதியாக முர்மு அவர்கள் நம் நாட்டின் முதல் குடிமகனாக உயர்வடைவதையும், அவர் வெற்றிபெற்றதையும் பொறுக்கமுடியாமல் ஒடுக்கப்பட்டோரின் வெற்றி கொண்டாட்டத்தை சீர்குலைக்க ஒரு வெற்று நாடகத்தை திமுக நடத்துகிறது. நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறி திமுகவினர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: "தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது" திமுகவை பொளந்து கட்டிய அண்ணாமலை

நான் கேட்கிறேன்  திமுகவுக்கு இந்த வெளிநடப்பால் விளம்பரம் கிடைக்கலாம், ஆனால் மக்களுக்கு என்ன பயன், நாடாளுமன்றத்தின் பயனுள்ள நேரத்தை பாழ்படுத்தி மக்கள் வரி பணத்தை விரையம் ஆக்குவதால் மக்களுக்கு என்ன பயன், இந்தியா இலங்கையை போல் ஆகிவிடும் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு விலைவாசி ஏற்றம் இருப்பதாக  டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார், ஆம் அவர் சொல்வது உண்மை தான், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தான் சிமெண்ட் விலை அதிகமாக உள்ளது, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கட்டுமானப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது.

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ரியல் எஸ்டேட் விலை அதிகமாக உள்ளது, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகமாக உள்ளது. இவை எல்லாமே கோபாலபுரத்து குடும்பத்தினர் நடத்தும் வணிக நிறுவனங்களால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திடீரென்று உயர்த்தப்பட்ட விலைகள் இரும்பு, சிமெண்ட், கட்டுமான பொருளும் ரியல் எஸ்டேட்டும் இலங்கையை போல தமிழகத்தில் மட்டும் அதிகரிக்க காரணம் திமுக தானே, தமிழகத்தில் கண்மூடித்தனமாக நடத்தப்படும் கமிஷன், கலசன், கரக்ஷன் காரணமாக அதாவது கோபாலபுரத்தில் கமிஷன் அதிகரித்ததால், தமிழகத்தில் அனைத்து விலைவாசியும் அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

தமிழகத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, தமிழகத்தில் கஞ்சா விற்பனை தாறுமாறாக நடக்கிறது, தமிழகத்தில் பாலியல் வன்முறை தலைவிரித்தாடுகிறது, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் அதிகரித்துள்ளது. ரவுடிகள் மற்றும் மாமூல் வசூலிக்கும் தொல்லைகள் புதிதுபுதிதாக அதிகரிக்கிறது. கொலையும் கொள்ளையும் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுகிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று ஊழல், பகல் கொள்ளை ஓயாமல் நடக்கிறது. பரம்பரையாய் தொடரும் குடும்ப ஆட்சியின் சுரண்டலால் ஊழலால் இலங்கையும் தமிழகமும் கடும் பாதிப்பில் இருப்பது உண்மைதான்.

இதையும் படியுங்கள்: அடுத்த தேர்தல் என் மகன் போட்டியிடுவார்… அவருக்கும் ஆதரவளியுங்கள்… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு!!

அதனால்தான் ஒருவேளை தமிழகம் இலங்கையை போல மாறிவிடுமோ என்ற அச்சம் டி.ஆர் பாலுவுக்கு ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அதற்காக அவர் போராட வேண்டிய இடம் தமிழக சட்டசபை தானே தவிர இந்திய நாடாளுமன்றம் இல்லை, மக்களை முன்னேற்றுவதற்காக மக்கள் பிரச்சினையை பேசும் மிக முக்கிய இடமான நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்து வெளிநடப்பு செய்வதாக ஊடக கண்துடைப்பு நாடக அரசியலை திமுக நடத்துகிறது. இதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!