உள்ளாட்சித் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவது எப்போது? கே.என்.நேரு தகவல்!!

Published : Jul 22, 2022, 07:42 PM IST
உள்ளாட்சித் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவது எப்போது? கே.என்.நேரு தகவல்!!

சுருக்கம்

உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 75 சதவீதம் மக்களுக்கு பணியாற்றும் துறையாக நகராட்சி நிர்வாகத் துறை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். நிதி நிலைமை காரணமாக அதனை நிரப்ப முடியவில்லை. இருப்பினும் விரைவில் அதிகாரிகள் முதல், பணியாளர்கள் வரை நியமிக்கப்படுவார்கள்.‌

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !

மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முதல் பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாயும், நமக்கு நாமே திட்டத்துக்கு 400 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக 876 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாலைகள், வடிகால், பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 

இதையும் படிங்க: உங்க நாடக கம்பெனி வேலையெல்லாம் நாடாளுமன்றத்தில் காட்டாதீங்க.. திமுகவை ஓங்கி குத்திய அண்ணாமலை.

ஆறுகள் ஏரி குளங்கள் மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சாதி பாகுபாடு இன்றி மின் மயானம் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு 75 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. நடப்பாண்டு மேலும் 75 இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கு தேவையான நிதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மின்மயானங்கள் அமைக்க கடந்த ஆண்டு 75 இடங்களும், நடப்பாண்டில் 7 இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றி வரும் தமிழக முதல்வருக்கு நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்