டி.டி.வியிடம் டோஸ் வாங்கிய அமைச்சர் எம்.சி.சம்பத் - வேகமெடுக்கும் அதிமுக உட்கட்சிப் பணிகள்

First Published Mar 5, 2017, 10:34 AM IST
Highlights
AIADMK Deputy General Secretary the party in full swing is starting to work


அதிமுக துணைப் பொதுச் செயலாளாரான டிடிவி தினகரன், முழுவீச்சில் கட்சிப் பணிகளை தொடங்கி உள்ளார். தனது சித்தியும் அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வருகிறார்.

வாரத்திற்கு ஒருமுறை சசிகலாவை நேரில் சந்தித்தும், மற்ற நேரங்களில் மொபைல் போனில் பேசியும் கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் யாருடைய தலையீடும் குறுக்கீடும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் டி.டி.வி தினகரன்…

ஒற்றைத் தலைமை, ஒரே அதிகார மையம் இருந்தால் தான் ஜெயலலிதா போன்று கட்சியைக் காப்பாற்ற முடியும் என்பதால் கட்சி நடவடிக்கைகளில் யாரையும் அனுமதிப்பதில்லையாம்…

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா தரப்புக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே வேகமெடுத்து முன்னேறி ஓடுகின்றனர்.

முதலில் டேமேஜ் கன்ட்ரோல் எனப்படும் சேதாரத்தைக் குறைக்கும் வகையில், வியூகம் அமைத்து செயல்படத் தொடங்கியிருக்கிறார் டி.டி.வி தினகரன். பல மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் சசிகலா தலைமையை எதிர்த்துச் செல்வதில்லை.மாறாக அவர்களது மாவட்ட எதிரிகள் கை ஓங்கி இருப்பதைக் காணப் பொறுக்காமல் தான் பல நிர்வாகிகள் ஓ.பி.எஸ்.சிடம் தஞ்சம் அடைகிறார்களாம்…

குறிப்பாக செங்கோட்டையனின் கை ஓங்கியதால் தான் சத்யாபாமா எம்.பி. ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்தாராம்.. செங்கோட்டையனின் மற்றொரு அரசியல் எதிரியான தோப்பு வெங்கடாச்சலமோ ராவணனின் அன்புக்கு கட்டுப்பட்டு வேறு வழியின்றி இருக்கிறாராம்…

இப்படி தலைமை மீதுள்ள அதிருப்தியை விட உள்ளூர் பாலிடிக்சால் அணிமாறுவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதத்திலும், ஏற்கனவே மாறியவர்களை திரும்ப அழைத்து வரவும், தினகரன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்…

அதன் ஒருபகுதியாக மாவட்ட வாரியாக நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியினரை அரவணைத்துச் செல்லாத அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு நல்ல டோஸ் விழுந்ததாம்… இதனால் பதறிப்போன சம்பத் எதிர்ப்பு நிர்வாகிகளிடம் சமரசமாகப் பேசி பிரச்சனையை சுமூகமாக முடித்தாராம்…

இதே போன்று வேலூர் மாவட்டத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் நிலோபர் கபில் ஆகிய மூன்று பேரையும் அழைத்துப் பேசி அவர்களுக்குள் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கினாராம்….

சுமார் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களையும் அமைச்சர்களையும் கண்டிக்க தலைமையில் ஒரு உறுதியான ஆள் கிடைத்துவிட்டதால், இனி கட்சிப் பணிகள் வேகமெடுக்கும் என துள்ளி குதிக்கிறார்கள் அதிமுக விசுவாசிகள்…

click me!