மீண்டும் களத்தில் குதித்த டி.டி.வி - ஆதரவாளர்கள் உற்சாகம்

First Published Dec 29, 2016, 4:05 PM IST
Highlights


ஜெயலலிதா மறைந்தவுடன் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கபட்டது.

அப்போது சசிகலாவின்  உறவினர்கள் ஏராளமானோர் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.

ஆனால் அவரது குடும்பத்தில் இருந்து அரசியல் ஈடுபட்டு தேர்தலில் நின்று எம்பி ஆக வெற்றியும் பெற்ற டிடிவி தினகரன் மட்டும் பவ்யத்தோடு ஒதுங்கியே இருந்தார்.

அனைவரும் கிளீன் ஷேவ் செய்து பளிச்சென்று இருந்த நிலையில் இவர் மட்டும் பல நாள் வளர்ந்த தாடியோடு சோகமாக காணப்பட்டார்.

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூத்த மகனான டிடிவி தினகரன் அவரது குடும்ப உறவினர்களிலேயே மிகவும் வித்யாசமானவர். அவர் தற்போது அரசியல் லைம்லைட்டுக்குள் வந்துள்ளார்.

தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்ட தினகரன் மீண்டும் பவர்புல்லான இடத்துக்கு வரவிருப்பது ஒட்டுமொத்தமாக ஒதுங்கி கிடக்கும் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா உறவினர்கள் யாரும் அரசியலில் தலையிட கூடாது என்ற ஜெயலளிதவின் உத்தரவுக்கு பிறகு அவரது மனம் நோகாத வகையில் ஒட்டுமொத்தமாக விலகி புதுச்சேரி ஆரோவில் பகுதியில் வீடு கட்டி கொண்டு செட்டில் ஆகிவிட்டவர்தான் இந்த தினகரன்.

எத்தனையோ பேர் உதவிகள் கேட்டு சென்றபோதும் அந்த நேரத்தில் தான் தீவிர அரசியலில் இல்லையென்றும் தன்னிடம் வரவேண்டாம் என்றும் தவிர்த்து வந்தார் தினகரன்.

டெல்லி அரசியல் வட்டாரத்தில் எம்பியாக இருந்தபோது 'வெரி டீசன்ட் மேன்' என்ற பெயரை பெற்றிருந்தார். ஜெயலலிதா மீது முகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருந்தார் தினகரன்.

'அம்மாவால்தான் வாழ்கையில் இவ்வளவு முன்னேறியுள்ளோம்' என்று தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வாராம் தினகரன்.

தற்போது அதிமுகவில் ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை நிரப்பும் அந்த வேலையில் சசிகலாவின் பளுவை குறைக்கும் வகையில் ஏராளமான சிக்கலான விஷயங்களை மிக சுலபமாக முடித்து கொடுத்து விட்டாராம் தினகரன்.

அதனால்தான் இன்று சசிகலாவை பொது செயலாளராக அறிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுக்கும்போது சசிகலா தினகரனை தனக்கு மிக அருகிலேயே நிறுத்தி கொண்டாராம்.

எது எப்படியோ தங்கள் அண்ணா தினகரன் மீண்டும் கட்சிக்குள் பவர் செனடர் ஆகி விட்டார் என துள்ளி குதிக்கிறார்களாம்  டிடிவி தினகரனின் பழைய ஆதரவாளர்கள்.

click me!