டிடிவி தினகரன் மீது அபாண்ட பழி சுமத்தி ஜெயலலிதாவிடம் இருந்து ஒதுக்கி வைத்ததே ஓபிஎஸ் தான் என ஆர்.பி. உதயகுமார் கூறியிருந்த நிலையில், கடந்த கால கசப்புணர்வா..? லட்சிய உணர்வா..? என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அதிகார மோதல்
அதிமுக ஒற்றை தலைமை விவாகரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிய இபிஎஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் என இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றினைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்த நிலையில், டிடிவி தினகரன் வரவேற்றிருந்தார்.
ஓபிஎஸ் தான் காரணம்
இந்தநிலையில் உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்.பி.உதயகுமார் நேற்று ஓபிஎஸ்சை விமர்சித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சாதாரண பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போது எல்லாம் பரிந்துரை செய்த டி டி வி தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த, பன்னீர்செல்வம் நடத்திய சித்து விளையாட்டுகளில் அவர் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழி மற்றும் அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று, அம்மா மறைந்த இரண்டு மாதம் பிறகு அவர் பதவிக்கு ஆபத்துக்கு வந்த பிறகு அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது, என்று குழப்பத்தை ஏற்படுத்தி அண்ணா திமுகவின் பிரிவிற்கு பிள்ளையார் சுழி போட்டது யார்? அன்றைக்கு போட்ட பிள்ளையார் சுழி பிரிவினை என்பது இன்று வரை ஒட்டாத கண்ணாடியாக என்றைக்கும் அந்த பிரிவினைக்கு தொடர்ந்து தலைமை தாங்கி நடத்திவருபவர் ஓபிஎஸ் ஆவார், என கூறியிருந்தார்.
அண்ணன் சொல்லுவதை கேளு தம்பி
இதனையடுத்து இதற்க்கு பதில் அளிக்கும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த கால கசப்புணர்வா?அல்லது புரட்சித்தலைவரும் நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா? எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.
கடந்த கால கசப்புணர்வா?அல்லது புரட்சித்தலைவரும் நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா?
எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.
மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும்.1/2
மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும். இதனை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை, அண்ணன் TTVஎன்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தெரிவித்து கொள்கிறேன் என டிடிவி தினகரன் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்