
அமமுக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்பியுமான டிடிவி தினகரன் நாட்களுக்கு முன்பு, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூரில் உள்ள மினாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்கானிப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் செய்திகளுக்கு..மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !
அப்போது டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டார். அதில், ‘சிறிய உடல்நலக் குறைவு அதாவது உணவு ஒவ்வாமை காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், ‘கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் அமமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்திலிருந்தும் பொன்.த.மனோகரன் நீக்கிவைக்கப்படுகிறார்.
மேலும் செய்திகளுக்கு..“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?
கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று முன்னதாக டிடிவி தினகரன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அமமுக அமைப்புச் செயலாளராக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் கே. சிவசண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக உடல்நிலையை கருத்தில்கொண்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சிவசண்முகம் விடுவிக்கப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்