தமிழ்நாட்டில் 20 இடங்களை தட்டித் தூக்கப் போகும் பாஜக... அடித்து கூறும் பாஜக மேலிட புள்ளி...

By Ezhilarasan BabuFirst Published Sep 12, 2022, 3:18 PM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 இடங்களை கைப்பற்றும் என அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் அசோக் எம் நீட்டி தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பாஜக நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 இடங்களை கைப்பற்றும் என அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் அசோக் எம் நீட்டி தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பாஜக நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

நீண்ட காலமாகவே தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என பாஜக முயற்சித்து வருகிறது. அதற்காக அக்கட்சி பல்வேறு பகிரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில்  இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு என்ற தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் அக்காட்சியின் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக எதிர்க்கட்சி என்றாலும் மக்கள் மத்தியில் பாஜகவை எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:  தனியாகவே ஜெயிச்சிருப்பேன்.. போகா கூடாத இடத்திற்கு போய் விட்டேன்- ஸ்டாலினை குத்தி கிழிக்கும் பாரி வேந்தர்

அதிலும் குறிப்பாக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே, கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. மறுபுறம்  திமுக அரசை அண்ணாமலை மிகக்கடுமையாக விமர்சித்து வருகிறார், திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் பூதாகரமாகி வருகிறது, இதன் எதிரொலியாக அதிக அளவில் இளைஞர்கள் அக்காட்சியை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில்தான் தமிழக பாஜக எஸ்டி பிரிவு சார்பில் திருப்பூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 3 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: தமிழக மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு..! புதிய திட்டத்தை அறிவித்த அமைச்சர் பொன்முடி

அதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அசோக் எம். நீட்டி எம்பி கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பேசியதாவது:-  நான் தற்போது தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன், இதன் காரணமாக பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன், தமிழகத்தைப் பொருத்தவரையில் பழங்குடியின  மக்கள் 6 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர், ஆனால் 1 சதவீதம் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டு வருகிறது,  இம்மக்களுக்கு தேவையான சாதி சான்று, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு செய்து தரப்படும்.

எதிர்வரும் 2020 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 20 முதல் 25 இடங்களை கைப்பற்றும், தமிழகத்தில் பாஜக சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் இதைவிட ஒரு மோசமான நிலையில் இருந்தும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது,  மும்பை தாராவி பகுதியில் வசித்து வரும்  தமிழர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் பாஜக செய்து கொடுத்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும், நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பணிகளை தமிழகத்திலிருந்து தொடங்கிவிட்டோம். கூட்டணி குறித்து அமித்ஷா, நட்டா முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!