தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை... தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!!

Published : Nov 16, 2022, 12:15 AM IST
தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை... தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!!

சுருக்கம்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். பயிற்சியின் போது பிரியாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஜவ்வு விலகியதால் சென்னை பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதால் அவரது கால் அகற்றப்பட்டது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடிதடி... ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!!

இந்த நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரியா மீண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அரசு மருத்துவர்களின் கவனகுறைவால் பிரியா மரணம் அடைந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதால் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். அவ்வாறு செல்லும் மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டியது அரசு மருத்துவர்களின் கடமை. ஆனால் தவறான சிகிச்சையால் பல கனவுகளுடன் எதிர்காலத்தை நோக்கி காத்திருந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் உயிரை பறித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: தவறான சிகிச்சை சிறுமி உயிரிழந்த விவகாரம்! இப்போ ரத்தம் கொதிக்கவில்லையா? ஸ்டாலினிடம் நாராயணன் திருப்பதி கேள்வி!

பிரியா மரணத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் பிரியாவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் பிரியாவின் உயிர் திரும்பி வருமா?. மேலும் பிரியாவின் மரணம் செய்யப்பட்டாலும், தொடர்பாக வரும் 2 காலங்களில் மருத்துவர்கள் பணியிடை நீக்கம் அரசு மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களை தமிழக அரசு வழிநடத்தி செல்ல வேண்டும். பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!