RN Ravi : ”ஒரே பாரதம், உன்னத பாரதம், எல்லோருடனும்.!” தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி

Published : Jun 10, 2022, 05:58 PM IST
RN Ravi : ”ஒரே பாரதம், உன்னத பாரதம், எல்லோருடனும்.!”  தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி

சுருக்கம்

ஏழுபது ஆண்டுகளாக இப்படி தான் இருந்துள்ளது. 2047க்குள் பாரதம் உலக தலைவராக மாற வேண்டும். இந்த இலக்கு ஒவ்வொரு இந்தியனின் ஒத்துழைப்புடன் தான் நடக்கும்.

CSIR - SERC நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் "CSIR-SERC அடித்தள நாள்" நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘அரசு கட்டமைப்புகள் உறுதியானதாக இருக்க இந்த நிறுவனம் உதவி வருகிறது. இல்லையென்றால் நிறைய தேசிய வளம் வீணாகும். அறிவியலுக்கு எல்லைகள் இல்லை. 

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் மும்முரமாக இருப்பதால் சுற்றி நடப்பது பற்றி தெரியாமல் இருப்பார்கள். உங்கள் இருத்தலின் சூழலை புரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோரும் நமது தேசத்துக்காக தான் இருக்கிறோம். நாம் தேசத்தை பார்க்கும் விதம், தேசத்தின் பிரச்னைகளை பார்க்கும் விதம் இவற்றில் 2014ம் ஆண்டு முதல் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளன. நமது வளர்ச்சி திட்டம் என்பது ஐந்தாண்டு திட்டமாக இருந்தது. 

ஒரு பிரச்னைக்கு நிரந்தர நீண்டகால தீர்வு இல்லாமல் சிறு சிறு தீர்வுகள் மட்டும் யோசிக்கப்பட்டன. தேசத்தை இனி நாம் பன்முகத்தன்மை கொண்டதாக பார்க்கவில்லை. நாம் அதை ஒன்றாக தான் பார்க்கிறோம். எல்லாருக்கும் சமமான வாய்ப்புகள் எல்லாம் கிடைக்க வேண்டும். அதனால் தான் முதலில், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட பார்வை இருந்ததால் ஒவ்வொரு பகுதிக்கும் என்ன கிடைத்தது என்பதில் பாகுபாடு இருந்தது.

ஏழுபது ஆண்டுகளாக இப்படி தான் இருந்துள்ளது. 2047க்குள் பாரதம் உலக தலைவராக மாற வேண்டும். இந்த இலக்கு ஒவ்வொரு இந்தியனின் ஒத்துழைப்புடன் தான் நடக்கும்.‘ஒரே பாரதம், உன்னத பாரதம், எல்லோருடனும், எல்லோருக்காகவும்’ என்று தமிழில் கூறினார். மேலும், நீங்கள் உங்களையே சவாலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ச்சிக்கு எல்லை இல்லை. நமது நாட்டில் நிலநடுக்கம் அதிகம் நடைபெற வாய்ப்புள்ள வட கிழக்கு மாநிலங்கள் உள்ளன.

வீட்டை இழந்த ஒருவர் மீண்டும் வீடு கட்ட மிகவும் செலவாகும். நடுத்தர குடும்பத்தில் இருப்பவர், ஏழையாக மாறிவிடுகிறார். அதற்கு ஏதாவது செய்ய முடியுமா என யோசியுங்கள். நமது நாட்டின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. தேசத்தை ஒற்றை அலகாக பார்ப்பதன் பலன்களை பார்த்து வருகிறோம். இன்று பொது வெளியில் யாரும் மலம் கழிப்பதில்லை. பாலின பாகுபாடு மிக மோசமாக இருந்தது. ஆனால் தற்போது பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில மாதிரி ஆய்வுகளின் முடிவுகள் அதையே குறிக்கின்றன’ என்று பேசினார்.

இதையும் படிங்க : Vijay : நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லணும் ! ஆதீன விவகாரத்தில் கருத்து சொன்ன அர்ஜுன் சம்பத்

இதையும் படிங்க : "ஆதீனத்தை தொட்டு பாருங்க.. திமுகவில் ஒருத்தர் கூட இருக்கமாட்டீங்க !" திமுகவுக்கு சவால் விடும் எச்.ராஜா !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!