
முதல்வர் ஸ்டாலின் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே. என் நேரு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, வைரமுத்து ஆகியோர் மரியாதை செலுத்தினர். நினைவிடத்தில் பணியாற்றும் 30 பேருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பள்ளி மாணவர்கள் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞரின் 98ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கலைஞர் கருணாநிதி
அதில், 'தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி. ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர். திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர். 'உடன்பிறப்பே...' என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர் ! இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழ்நாட்டின் தலைமகன் - தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை 'தமிழினத் தலைவர்' கலைஞரைப் போற்றினேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Kamal : ஒடுக்கப்பட்டோருக்கான ஒலி..முரசறைந்த கலைஞரை நினைவு கூர்வோம் - கமல் ஹாசன் ட்வீட் !
இதையும் படிங்க : HBD Kalaignar Karunanidhi : “தமிழுக்கு அகவை 99” - அறிவாலயம் முதல் முரசொலி வரை முதல்வர் ஸ்டாலின் மரியாதை !