Vairamuthu Tweets : கருப்பு சிவப்பு; வாரமெல்லாம் செய்தியானவன்..எங்கள் கலைஞர் - வைரமுத்து ட்வீட் !

By Raghupati RFirst Published Jun 3, 2022, 12:10 PM IST
Highlights

Vairamuthu Tweets on 99th Kalaignar Karunanidhi Birthday : கலைஞரின்  98ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

கருணாநிதி பிறந்தநாள்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியான  இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. 

அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கலைஞர் மீது தீவிர பற்று கொண்ட கவிஞர் வைரமுத்து கலைஞர் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் தனது கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், 

'அஞ்சுகத்தாயின் ஓரே மகன் ஆகையால்

நீ ஒன்றானவன்

கருப்பென்றும், சிவப்பென்றும்

இரண்டானவன்

பிறந்தநாளால் மூன்றானவர்...

தியாகராயர்- பெரியார்- அண்ணா- கலைஞர்

என்ற வரலாற்று வரிசையால் நான்கானவன்

தமிழ்நாட்டு முதலமைச்சராய்

ஐம்முறை ஆண்டதால் ஐந்தானவன்

எமக்கு இனிப்பு

இந்திக்கு கசப்பு

ஏழைக்கு உப்பு

வயிற்றில் கரைத்ததால் எதிரிக்கு புளிப்பு

வாதத்தில் உறைப்பு

பித்தம் நீக்கும் துவர்ப்பு

அறுவகைச் சுவைகளால் ஆறானவன்

வாரமெல்லாம் செய்தியானதால்

ஏழானவன்

திசையெல்லாம் இசைபட வாழ்ந்ததால்

எட்டானவன்

கிரகங்களெல்லாம் சுற்றி வந்த சூரியன் என்பதால்

நீ நவமானவன்

அள்ளிக் கொடுத்த முரசொலி விருதால்

லட்சமானவன்

எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கொடுத்ததால்

கோடியானவன்

உன்னை

எண்ணங்களாலும் சிந்திக்கலாம்;

எண்களாலும் சிந்திக்கலாம்..' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Kamal : ஒடுக்கப்பட்டோருக்கான ஒலி..முரசறைந்த கலைஞரை நினைவு கூர்வோம் - கமல் ஹாசன் ட்வீட் !

இதையும் படிங்க : HBD Kalaignar Karunanidhi : “தமிழுக்கு அகவை 99” - அறிவாலயம் முதல் முரசொலி வரை முதல்வர் ஸ்டாலின் மரியாதை !

click me!