திமுக ஊழல் செஞ்சுருக்கு.. அண்ணாமலை சொல்லும் எல்லாமே உண்மை.! அடித்து சொல்லும் வி.பி துரைசாமி

By Raghupati RFirst Published Jun 17, 2022, 5:16 PM IST
Highlights

BJP : நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை சம்மந்தப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் சுப்ரமணியசாமி தொடர்ந்துள்ள வழக்கின் அடிப்படையில், ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகின்றன. 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பாஜக துணைத்தலைவர் வி. பி துரைசாமி நாமக்கல் வந்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘ தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீதும், முதல்வர் குடும்பத்தினர் மீதும், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சுப்பிரமணி, நாசர் என பல அமைச்சர்கள் மீதும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லி வருகிறார். 

இந்த குற்றச்சாட்டுகளை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் இதுவரை மறுக்க வில்லை. அவர்கள் மவுனம் சாதிப்பதால், பாஜக அண்ணாமலை கூறுகின்ற அத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளும் உண்மை என்று புலனாகிறது. இதில் மாற்றுக்கருத்து இருந்தால் திமுக கட்சியோ, ஆட்சியோ கோர்ட்டுக்கு போகட்டும் நாங்கள் நிரூபித்துக் காண்பிக்கின்றோம். நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை சம்மந்தப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் சுப்ரமணியசாமி தொடர்ந்துள்ள வழக்கின் அடிப்படையில், ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிங்க : ADMK : அதிமுக வீழ்ந்தது யாரால் தெரியுமா ? முற்றும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் - இதுதான் காரணமா ?

இது சம்மந்தமாக முன்னுக்குப்பின் முரனாக, முன்னாள் அமைச்சர் சிதம்பரம் அறிக்கை விடுகிறார். கோர்ட்டை அவமதிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி மக்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தி வருகிறது. இது ஏதோ பொதுமக்களுக்கு எதிரான விசாரணை போன்று, இவ்விவகாரம் தொடர்பாக, மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கவர்னரை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக கூறுகின்றார். இது பொதுமக்கள் பிரச்சினை இல்லை, ஊழல் குற்றச்சாட்டு என்பதால் சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் கோர்ட்டில்தான் இதை சந்திக்க வேண்டும்.

காங்கிரசார் போராட்டம் நடத்துவது சட்டத்திற்கும், நீதிக்கும், மக்களுக்கும் எதிரானது. அதிமுகவில் ஒன்றை தலைமை விவகாரம் என்பது அதிமுக உட்கட்சி விவகாரம் அதை அவர்கள் பொதுக்குழுவினை கூட்டி முடிவு எடுப்பார்கள். அதிமுகவை உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்மந்தம் இல்லை இதுகுறித்து கருத்து கூறவும் விருப்பமில்லை’ என்று கூறினார்.

இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !

click me!