கோவை குண்டு வெடிப்பில் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்கு .! ஆர்.எஸ்.பாரதி பேச்சு !

By Raghupati R  |  First Published Nov 4, 2022, 10:24 PM IST

திட்டமிட்டு அண்ணாமலை ஒரு சதி செய்து வருகிறார் அவரே குண்டு வைத்து ஆட்களை செட் செய்கிறார் என்பது தெரியவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளார் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி.


மதுரை மாநகர மாவட்ட தி.மு.க சார்பில் இந்தித் திணிப்புக்கு எதிராக விளக்கப்  பொதுக்கூட்டம் நடைபெற்றுது. இதில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசும் போது, ‘காவல்துறைக்கு தகுதியற்றவர்கள் என்று சொல்லி வெளியேற்றப்பட்டவர்கள் தற்சமயம் நம்மிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. தமிழுக்கு எந்தவிதமான பணிகளை திமுக செய்துள்ளது என்பதை நமது கடைகோடி தொண்டனுக்கே தெரியும். அவனே பதில் சொல்லி விடுவான். ஹிந்தியை தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் எந்த காலத்திலும் நுழைக்க முடியாது.

Tap to resize

Latest Videos

undefined

தலைவர் கலைஞர் அவர்கள் அரசியலுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் இந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1960 ஆம் ஆண்டு ஹிந்தியில் தமிழ்நாட்டில் நுழைக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் நிணைத்த பொழுது கருப்பு கொடி காட்ட வேண்டும் என  அப்பொழுது அறிஞர் அண்ணா சொன்னார். நேற்று அரசியலுக்கு வந்த பரதேசி  எல்லாம் நமக்கு சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க..தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!

 வரலாற்றை பேசுகிற பொழுது உண்மை நிலையை தெளிவாக எடுத்து கூற வேண்டும் அதை திருத்தி தவறாக எடுத்துச் சொல்லக் கூடாது. ஹிந்தி எதிர்ப்புக்கு திமுக தியாகம் செய்தது போல இந்த சுதந்திர இந்தியாவில் வேறு எந்த கட்சியும் தியாகம் செய்தது கிடையாது. பிஜேபியாக இருந்தாலும் மற்ற கட்சிகளாக இருந்தாலும் வரலாறு தெரியாத பசங்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து விட்டார்கள். நான் தொடுத்த வழக்குகளில் எந்த வழக்கிலும் நான் தோல்வி பெற்றது கிடையாது. 

நான் பேசுவதை தவிர்த்து விட்டு வெட்டி ஒட்டி போடுவது ஏன் சிலர் வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஹிந்தி என்பது எங்குமே கிடையாது. ஒரு காலகட்டங்களில் திரையரங்குகளில் ஹிந்தி படம் ஓடும் இப்பொழுது ஹிந்தி படம் ஓடுவதில்லை இது எல்லாம் வயிற்றெரிச்சல்தான் டெல்லிக்காரர்களுக்கு. அரசியலில் காளிமுத்து மிகப்பெரிய தலைவராக சபாநாயகராக இருந்து மறைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது ஹிந்தி எதிர்ப்பு போராட்டமே. ஹிந்தி எதிர்ப்பு தியாகிகளை மதித்த ஒரே கட்சி திராவிட முன்னேற்ற கழகமே. 

ஹிந்தி நொலைத்து விடுவோம் என்று எண்ணினால் தமிழகம் தாங்கிக் கொள்ளுமா ?. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு க ஸ்டாலின் ஹிந்தி எதிர்த்து கண்டன தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்.ஆனால் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த பொழுது அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஹிந்தியை எதிர்த்த 86ல் பேராசிரியர் உள்ளிட்ட 10 பேரை சட்டமன்ற பேரவையிலிருந்து நீக்கினார் அன்றைக்கு சபாநாயகராக இருந்தவர் எம்எஸ் பாண்டியன். ஹிந்தி எதிர்ப்புக்கான தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பியுள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். 

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அளவுக்கதிமான கூட்டம் இருந்தால் இருந்தது. நாங்களே அப்பொழுது மூன்றாவது கட்சியாக தான் இருந்தோம் இப்பொழுது அவர் எங்கே இருக்கிறார். எங்களது திமுகவை யாராலும்  அழிக்க முடியாது. எத்தனையோ முறை திமுக அழிந்து விடும் என்று எண்ணினார்கள் ஆனால் நிச்சயமாக அது ஒரு பொழுதும் முடியாது. எமர்ஜென்சி காலகட்டத்தில் திமுகவில் அமைச்சராக இருந்து பதவி அனுபவித்தவர்கள் எல்லாம் சென்றார்கள் பேராசிரியர் தவிர மற்றவர்கள் எல்லாம் சென்றார்கள் தலைவர் தன்னந்தனியாக நின்று அந்த இயக்கத்தை தலை தூக்கி நிறுத்தினார்.

இதையும் படிங்க..யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!

பிஜேபி என்னும் கட்சி எமர்ஜென்சியில் என்ன ஆனது எமர்ஜென்சி எதிர்க்க முடிந்ததா கட்சியை கலைத்து விட்டு சென்றவர்கள் ஜனசங்கம்என்னும் கட்சியை கலைத்து விட்டு சென்றவர்கள் தான் இப்பொழுது பிஜேபி என்னும் பெயரில் ஆரம்பித்துள்ளார்கள்.தலைவர் கலைஞர் மட்டும்தான் அண்ணா ஆரம்பித்த கட்சியின் பெயர் திமுக என்பதை ஒரு பொழுதும் மாற்ற முடியாது என்ற கொள்கையோடு இருந்தவர். வேறு ஒரு கட்சியாக இருந்தால் அண்ணாமலையை என்.ஐ குற்றவாளியாக சேர்த்திருக்கும்.

சைலேந்திரபாபு 72 வெடிகுண்டுகள் மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று சொல்லுகிறார். அண்ணாமலை கோயம்புத்தூர் வழக்கில் மாற்று கருத்துக்களை சொல்லி வருகிறார். இப்படி கருத்துக்களை மாற்றி சொல்கிற பொழுது குளறுபடி ஏற்படுமா ஏற்படாதா குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களே, இவர் ஐபிஎஸ் படித்தரா அல்லது போலி சான்றிதழ் வாங்கினாரா? கோயம்புத்தூர் குண்டுபிடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தப்பித்தார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையான பொறுப்பு அண்ணாமலையே.

திட்டமிட்டு அண்ணாமலை ஒரு சதி செய்து வருகிறார் அவரே குண்டு வைத்து ஆட்களை செட் செய்கிறார் என்பது தெரியவில்லை. நாம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எதையும் செய்வதற்கு தயாராக உள்ளது பிஜேபி. குஜராத்தில் 150 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள் அண்ணாமலை என்ன செய்து கொண்டிருக்கிறார். அந்த காண்ட்ராக்டர் யார் பிஜேபிக்கு டொனேஷன் கொடுத்தவர் தான் நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். 

இதுவரை நான்கு நாட்களாக கைது செய்யப்படவில்லை பெற்ற லஞ்சம் எவ்வளவு பிஜேபியை ஒலிக்கட்டும் அளவிற்கு நாம் தயாராக வேண்டும். கதை விட்டு விடுங்கள் அவர்களை சண்டையிட்டு ஒருத்தர் சண்டைக்கு அழித்துக் கொள்வார்கள்.  பாதி பேர் எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்றார்.

இதையும் படிங்க..Viral Video: எங்க வீட்டுக்கு போகணும், நான் வரமாட்டேன்.! திருமணத்திற்கு பிறகு கணவருடன் செல்ல மறுத்த பெண் !!

இதையும் படிங்க..19 வயது பையனை திருமணம் செய்யும் 56 வயது பெண்.. அடேங்கப்பா.! இப்படியொரு காதல் ஜோடியா.!!

click me!