“TN 10... வெள்ள இன்னோவா கார்” நிம்மி வீட்டை ரவுண்டு கட்டும் அந்த டீம்... இன்ச் பை இன்ச் நோட்டமிடும் சிறை கேங்!

First Published May 10, 2018, 12:21 PM IST
Highlights
TN 10 Flood Innova Car The team that builds Nimmi house


தனியார் கல்லூரியில் புரோக்கராக மாறிய  பேராசிரியையான நிம்மி, கல்லூரி மாணவிகளை மறைமுகமாக பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி வலைக்தலங்களில் ரவுண்டடித்ததை அடுத்து . அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்ததால், நிம்மி விவகாரம் விவகாரம் தொடர்பாக ஒரு புறம் சிபிசிஐடி போலீஸாரும் ஒரு புறம் ஓய்வு பெற்ற சந்தானம் குழுவினரும் விசாரித்து வந்தனர். நிம்மி விவகாரத்தில் விசாரணையை நிறைவு செய்த சந்தானம் அண்ட் டீம் வரும் 15ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் நிர்மலா தேவி சிறையில் உள்ள நிலையில், அருப்புக்கோட்டையை அடுத்த ஆத்திப்பட்டியிலுள்ள நிம்மியின் வீட்டின் பூட்டு மற்றும் கதவை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். வீட்டின் வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நிம்மியின் வீட்டில் ஆவணங்களை அழிக்க நடந்த முயற்சியா? அல்லது பணம், நகைகளை கொள்ளையடிக்க நடந்த முயற்சியா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்மலா வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களை அள்ளிக் கொண்டு போயிருக்கிறார்கள். ’போலீஸ் விசாரணையின் போதும், சிறையில் இருந்த சமயத்திலும் நிறைய பேசியிருக்கிறார் நிம்மி. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சமயத்தில், ‘என்கிட்ட இருக்கும் ஆதாரங்களை எல்லாம் வெளியே எடுத்துவிட்டால், சென்னை ஆடிப் போயிடும். ஆளுனர் மாளிகையில் இருக்கும் யாருக்கெல்லாம் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்குன்னு என்கிட்ட ஆதாரங்கள் இருக்கு.

என்னோட இரண்டு செல்போன், லேப்டாப் எல்லாம் தூக்கிட்டு வந்துட்டாங்க போலீஸ். இதுதவிர, இன்னொரு செல்போனும் என்கிட்ட இருக்கு. அதை பத்திரமா வீட்டுல வெச்சிருக்கேன். அதுல எல்லா ஆதாரங்களும் இருக்கு. சீக்கிரமே நான் வெளியே போயிடுவேன். அப்போது எல்லா ஆதாரங்களையும் வெளியிடுவேன்.

எனக்குன்னு எங்க ஏரியாவுல இருந்த மானம் மரியாத எல்லாமே போச்சு , என்னோட பேரு புதுசா கெட்டுப் போறதுக்கு எதுவும் இல்ல என பீல் பண்ணாராம் நிம்மி. ஆனால், என்னை மட்டும் மாட்டிவிட்டுட்டு வெளியே ஜாலியா உட்கார்ந்துட்டு இருக்காங்க இல்லையா... அவங்களை எல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வராம விடமாட்டேன் என உள்ளே உள்ள ஜெயில் ஃப்ரண்ட்ஸ் கிட்ட நிம்மி பேசியிருக்கிறார்.

ஆனால், நிம்மியை நோட்டமிட சிறையில் ஒரு டீம் இருக்காம். அவர்கள் நிம்மியின் நடவடிக்கையை மொத்தமாக உடனுக்குடன் வெளியே போயிருக்கிறது. அந்த அளவுக்கு நிம்மியை கண்காணித்துக் கொண்டிருக்கிறது சென்னையில் இருக்கும் அந்த டீம். அந்த டீமில் உள்ளவர்கள்தான், நிம்மி வீட்டுக்குள் இருக்கும் ஆதாரங்களைத் தேடி உள்ளே நுழைஞ்சிருப்பாங்க. நிம்மி வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் கலைச்சுப் போட்டு இருக்காங்க. அனால் பொருகள் எல்லாமே அப்படியே இருந்திருக்கிறது.

ஆனால், பொருட்களை திருட வந்தவங்க அப்படியெல்லாம் எதையும் எடுக்காமல் விட்டுட்டுப் போக மாட்டாங்க. நிர்மலா வீட்டில் இருக்கும் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாகத்தான் அவர் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து இருக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக TN 10 என்று சென்னை பதிவெண்ணில் தொடங்கும் வெள்ள இன்னோவா கார் ஒன்றுதான் நிம்மி வீடு இருக்கும் பகுதிக்கு அடிக்கடி வந்து போனதாக சொல்கிறார்கள்.

அதனால், நிம்மி வீடு உடைக்கப்பட்டதற்கும் சென்னைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவே அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள். ஏற்கெனவே போலீஸ் சோதனையில் போது நிம்மி மறைத்து வைத்திருந்த ஒரு போனை மட்டும் போலீஸார் கைப்பற்றினார்கள். மற்ற எதையும் போலீஸ் எடுக்கவில்லை. அப்படி மிச்சமிருந்த ஆதாரங்களையெல்லாம்தான் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள் கொள்ளையர்கள்.

நிம்மியின் வாயை மூடுவதை விட, அவரிடம் இருக்கும் ஆதாரங்களை அழிப்பதே நல்லது என நினைக்கிறதாம் நிம்மியின் பின்னணியில் இருக்கும் டீம். அதற்கான வேலையில்தான் இப்போது அவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.நிம்மி கைநீட்டும் நபர் ஆளுனர் மாளிகைக்குள்தான் இருக்கிறாராம். எந்த விஷயமும் வெளியே வந்துவிடக் கூடாது என்பதில் அவர்தான் முனைப்போடு இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

அதே போல நிம்மி பயன்படுத்தி வந்த கார் அவரது வீட்டுக்கு பின்னாடி தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். அந்த காரின் சாவியை விசாரணையின் போது நிம்மியிடம் கேட்டார்களாம். ஆனால் நிம்மியோ ‘வீட்டுலதான் இருக்கும்.. நல்லா தேடித் பாருங்க..’ என சொல்லியிருக்கிறார். ஆனால், இதுவரை அந்த கார் சாவி கிடைக்கவில்லையாம். ”

click me!