உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இது தான் நடக்கும்.. பங்கமாய் கலாய்க்கும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumar  |  First Published Dec 1, 2022, 6:42 AM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியம் மாசில்லாமல் பேச வேண்டும். ஏழை, எளிய மக்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் இவர்கள் எல்லாம் அம்மா உணவகத்தால் எவ்வளவு பயனடைந்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். 


 அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அதிமுக , சின்னம் தவறானவர்கள் கையில் இருப்பதை மக்கள் உணர்வார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- அமைச்சர் மா.சுப்பிரமணியம் மாசில்லாமல் பேச வேண்டும். ஏழை, எளிய மக்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் இவர்கள் எல்லாம் அம்மா உணவகத்தால் எவ்வளவு பயனடைந்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். அரசாங்கமே நல்ல தரமான உணவு குறைந்த விலையில் விலைவாசி உயரும் நேரத்தில் அம்மா உணவகங்கள் மூலம் கொடுத்ததை பல பொருளாதார அறிஞர்களே பாராட்டினார்கள்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறி! அதற்கு அமைச்சர்கள் சண்டையே உதாரணம்! திமுகவை ரவுண்ட் கட்டும் டிடிவி.!

அம்மா கொண்டுவந்த திட்டத்தை மூடு விழா நடத்த வேண்டும் அல்லது அவர்களின் தலைவர் பெயரில் மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆதரவற்றோர்களுக்கு அட்சய பாத்திரமாக அம்மா கொண்டு வந்த திட்டத்தை முடக்கினால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். திராவிட மாடல் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இன்று முதலமைச்சர் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். 

இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்த ஆட்சி செயல்படுகிறது. இந்த ஆட்சியாளர்கள் தங்களின் வளர்ச்சிக்காகவே பாடுபடுகிறார்கள். மக்களை கண்டு கொள்வதில்லை. உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்துவிடுவாரா அல்லது போதை கலாச்சாரத்தை நிறுத்திவிடுவாரா இன்னும் இரண்டு திரைப்படங்கள் அதிகமாக நடிப்பார் அவ்வளவுதான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையை சுயமாக இயங்கவிட வேண்டும். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தலைவிரித்தாடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். 

அமமுக சுயமாக சிந்தித்து செயல்படும் இயக்கம். நயவஞ்சக கூட்டத்தில் ஒரு போதும் அமமுக சேராது.  இபிஎஸ்வுடன் இணைந்து செயல்பட்டது தவறு என்பதை ஓபிஎஸ் உணர்ந்துவிட்டார். அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அதிமுக , சின்னம் தவறானவர்கள் கையில் இருப்பதை மக்கள் உணர்வார்கள். இபிஎஸ் வசம் இருந்தால்  இரட்டை இலை சின்னம் தனக்கான மதிப்பையும், மரியாதையையும் இழந்துவிடும் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துதுள்ளார். 

இதையும் படிங்க;-  கருணாநிதி குடும்பம் ஆக்டோபஸ்.. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அரக்கன்.. போற போக்கில் திமுகவை விளாசிய டிடிவி..!

click me!