திமுக ஆட்சிக்கு வந்தது முதல் வரி விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது... செல்லூர் ராஜூ விமர்சனம்!!

By Narendran SFirst Published Nov 30, 2022, 11:11 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்கு வரி விதித்து வாட்டி வதைத்துவருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்கு வரி விதித்து வாட்டி வதைத்துவருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், அதிமுக முடங்கிவிட்டது, உடைந்துவிட்டது எனப் பலர் கூறிவருகிறார்கள். அதிமுகவைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அண்ணன், தம்பியாகப் பழகிவருகிறோம். நாங்கள் பனங்காட்டு நரிகள். எதற்கும் அஞ்ச மாட்டோம். எங்களை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். அதிமுகவை நம்பியவர்கள் கெட்டுப்போனது இல்லை. எந்தத் தலைவரையும் நம்பி அதிமுக இல்லை. புரட்சித்தலைவர் காலத்தில் இருந்த தலைவர்களின் வழிகாட்டுதலில் இயக்கம் இருக்கிறது. எங்களைவிட்டுப் பிரிந்து போனவர்கள் பற்றிக் கவலை இல்லை. இரட்டை இலையும், அதிமுக கொடியும் எங்கு இருக்கிறதோ அங்கேதான் உண்மையான அதிமுக தொண்டன் இருப்பான். நடிகை குஷ்புவுக்குக் கோயில் கட்டிய தமிழ்நாட்டில் திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் தரம் தாழ்ந்து பேசுகிறார். யாரும் அவரைக் கண்டிக்கவில்லை. திமுகவினர் பெண்களைத் தரம் தாழ்த்திப் பேசிவருகிறார்கள்.

இதையும் படிங்க: திமுக அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் கொந்தளித்து வயிறு எரிகின்றனர்.. ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்.!

பெண்களுக்குச் சமத்துவமாக இடம் கொடுத்த ஒரு கட்சி என்றால் அது அதிமுக தான். பெண்களுக்காகப் பல திட்டங்களை அதிமுக அரசு கொண்டுவந்தது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கத்தான் தகுதியானவர். முதல்வராக இருக்கத் தகுதி இல்லை. அதிமுக-வின் பத்தாண்டுக்கால ஆட்சி சரியில்லை எனக் கூறும் அவர்களின் இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா? பொது விழாக்களில் அமைச்சர்களின் அவதூறுப் பேச்சுகளை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அமைச்சர்களைக் கேள்வி கேட்க முதல்வருக்கு திறன் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்கு வரி விதித்து வாட்டி வதைத்துவருகிறது. விலைவாசியைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதிமுக ஆட்சியைப் பற்றிப் பேச முதல்வருக்குத் தகுதி இருக்கிறதா? தமிழக மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் கொடுத்தது அதிமுக நிதியமைச்சருக்கு வெட்கம் இல்லையா? அதிமுக கொண்டு வந்த திட்டங்களைக் குறைகூறிவிட்டு அதே திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் இருப்பதாகச் சொன்னதை இன்றுவரை நிரூபிக்கவில்லை. திமுக அரசு மதுரை மாநகராட்சிக்கு எந்தவொரு நிதியும் ஒதுக்கவில்லை.

இதையும் படிங்க: கோவில்களின் மரபை சிதைக்க முயற்சி... திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!!

திமுக ஆட்சியில்தான் நாள் முழுவதும் டாஸ்மாக் செயல்படுகிறது. அதிமுக-வில் சீனியர், ஜூனியர் பாகுபாடு இல்லை. திமுக அமைச்சர்களிடம் ஒற்றுமை இல்லை. ஆட்சிக்கு வந்ததும் மது ஒழிப்பு என்று சொன்ன கனிமொழி, இப்போது எங்கே சென்றார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஏன் இணைக்க வேண்டும் என்பது தொடர்பாக அறிக்கை இல்லை. அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சர் ஆகிவிட்டார். 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்துசெய்வதற்கு திமுக அரசு வழிவகை செய்கிறது. மதுவை ஒழிக்க வழியில்லாமல் தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறியிருக்கிறது. மடிக்கணினி, இரு சக்கர வாகனம், தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது திமுக ஆட்சி. பாரபட்சம் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைக் கொடுத்தது அதிமுக ஆட்சி. மதுரை மக்களுக்கு தி.மு.க கொண்டுவந்த திட்டம் எதுவும் தெரியுமா. 100 கோடி ரூபாயில் கலைஞர் நூலகம். இங்கே குடிக்கவே கஞ்சி இல்லை, அவர் அப்பாவுக்கு 100 கோடி ரூபாயில் நூலகமாம். எழுதாத பேனாவுக்கு 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த ஆட்சிதான் திமுக என்று தெரிவித்துள்ளார்.

click me!