அம்மா உணவகத்தில் வருமானம் எதிர்பார்க்க கூடாது. சேவை மனப்பான்மையோடு அணுக வேண்டும். அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவா திகழ்ந்தது.
அதிமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்தும் 18 மாத திமுக ஆட்சி குறித்தும் பொது இடத்தில் தன்னுடன் முதல்வர் ஸ்டாலின் விவாதிக்க தயாரா என இபிஎஸ் சவால் விடுத்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- அம்மா உணவகத்தில் வருமானம் எதிர்பார்க்க கூடாது. சேவை மனப்பான்மையோடு அணுக வேண்டும். அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவா திகழ்ந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்தில் போய் சீர்கெட்டு விட்டது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்ளே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையால் தடுக்க முடியவில்லையா? பள்ளி, கல்லூரிகளின் வாசல்களிலேயே போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடைபெறுகின்றது. இது ஊடங்களில் வரும் செய்தி உண்மை தண்மை அறிந்து செயல்பட வேண்டும். தமிழகதத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகளை எதிர்க்கட்சியாக இருந்து சுட்டிக்காட்டுகிறோம், ஆளுங்கட்சி அதனை சரிசெய்வதில்லை. நாட்டு மக்களை பற்றி சிந்திக்க வேண்டிய ஸ்டாலின், தனது வீட்டு மக்களை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறார். கலகத் தலைவன் திரைப்படம் எப்படி ஒடுகிறது. வசூல் ஆகிறதா என அமைச்சரிடம் கேட்கிறார் ஸ்டாலின். மகனின் திரைப்படம் பற்றி அமைச்சரிடம் பேசுவதுதான் முதலமைச்சரின் வேலையா? முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து கடமை தவறி செயல்படுகிறார் ஸ்டாலின் என இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
மேலும், திமுக அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் கொந்தளித்து வயிறு எரிகின்றனர். மக்களை பாதுகாப்பதில் முதல்வர் கவனம் செலுத்தவில்லை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் திமுக அரசு வந்த உடன் கைவிடப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.