அரிதாரம் பூசி நடிக்கும் திமுகவினரின் உண்மை முகம் இதுதான்... அம்பலப்படுத்தும் டிடிவி.தினகரன்..!

Published : Dec 21, 2022, 07:38 AM ISTUpdated : Dec 21, 2022, 08:21 AM IST
அரிதாரம் பூசி நடிக்கும் திமுகவினரின் உண்மை முகம் இதுதான்... அம்பலப்படுத்தும் டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் வனப்பகுதி காப்புக்காடு தேசிய பூங்கா வன உயிரின காப்பகங்கள் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மணல் கல்குவாரி போன்றவை செயல்படுவதற்கு தடை விதிப்பதாக 2021ம் ஆண்டு நவம்பரில் உத்தரவிடப்பட்டது. 

காப்புக்காடுகளின் எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு திமுக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் வனப்பகுதி காப்புக்காடு தேசிய பூங்கா வன உயிரின காப்பகங்கள் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மணல் கல்குவாரி போன்றவை செயல்படுவதற்கு தடை விதிப்பதாக 2021ம் ஆண்டு நவம்பரில் உத்தரவிடப்பட்டது. இதனால், காடுகள் மற்றும் காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில் கல்குவாரி கிரஷர் போன்றவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க;- ஓஹோ இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதா? வச்சு செய்யும் டிடிவி.தினகரன்.!

 ஆனால், தற்போது காப்புக்காடுகளை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கல்குவாரிகள் அமைக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாக  அரசு அறிவித்து அனுமதி வழங்கியது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் குவாரிகள் நடத்துவதற்கு இதுவரை தடை இருந்ததால்தான் காடுகளில் வன உயிரி சூழல் ஓரளவுக்கு பாதுகாப்பாக இருந்தது. 

 

ஆனால், தற்போது இந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டால் காப்புக்காடுகளும் கனிம வளத்தால் கொழிப்பவர்களின் வேட்டைக் காடுகளாகிவிடும். சுற்றுச்சூழலைக் காக்கவே அவதாரம் எடுத்தவர்களைப் போல அரிதாரம் பூசி நடிக்கும் தி.மு.க.வினரின் உண்மை முகம் இதுதான் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  எனது வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டாங்க சொன்னீங்க.. இப்ப என்ன சொல்றீங்க.. ஸ்டாலினை சீண்டும் தினகரன்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!