ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர் அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்தார்.
எம்ஜிஆரின் 35-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் முழுவதும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா ஓட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் . முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர் அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லம் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது, சசிகலா பக்கம் இருந்தவர். பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என அதிரடியாக கூறியவர்.
இதையும் படிங்க;- அதிமுகவில் இணையும் அன்வர் ராஜா.. யார் அணியில் இணையப்போகிறார் தெரியுமா ? எடப்பாடியா? பன்னீரா?
தற்போது கட்சித் தலைமை வலுவாக இல்லை என்றும், அதனால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறியதை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதியன்று முன்னாள் எம்.பியும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா அக்கட்சியில் அதிரடியாக நீக்கப்பட்டார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் வேறு கட்சி எங்கும் செல்லாமல் இருந்து வருகிறார். அவ்வப்போது, எம்ஜிஆர் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று போஸ்டர் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், வரும் 24-ல் எம்ஜிஆரின் 35-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் முழுவதும் அன்வர் ராஜா ஓட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில் தலைவா! ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி. சிதறி கிடக்கிறது. நாங்கள் பதறி துடிக்கிறோம் காப்பாற்றுங்கள் என அதில் அச்சிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தற்போது இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் என 4 பிரிவுகளாக பிரிந்து கிடப்பதையே இந்த போஸ்டர் மூலம் அன்வர் ராஜா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ்க்கு டப் கொடுக்கும் இபிஎஸ்..! திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த எடப்பாடி