
மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள் இந்த நாள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கரூரில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்;- மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள் இந்த நாள். இதற்கு முன் எந்த அரசும் இப்படியொரு சாதனையை செய்தது கிடையாது. எதையும் சொல்லி விட்டு செல்வதல்ல இந்த அரசு. செயல்படுத்திக் காட்டுவதே இந்த அரசு. உழவர்களுக்கு 1989ம் ஆண்டு இலவச மின்சார திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க;- நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக..! வாக்குச்சாவடி முகவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் இலவச மின்சாரத்தால் உணவுப்பொருள் உற்பத்தி அதிகரிப்பால் மற்ற மாநிலங்களைவிட உணவுப்பொருள் விலை குறைவாக உள்ளது. பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வாழ்க்கை தரம் நிலையானதாக உள்ளது. இந்திய அளவில் மின் உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு சாத்தியமா? என்று கேட்டார்கள். முடியுமா? என்பதை முடித்து காட்டுவதே திமுக அரசு. மின் இணைப்பு திட்டத்தை துவக்கி வைத்த 6 மாதத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உழவர்களுக்கு இலவச மின்சார திட்டத்தை முதல்முறையாக செயல்படுத்தியவர் கலைஞர். திமுக ஆட்சிகாலத்தில் பாசனப்பரப்பு விரிவடைந்து வருகிறது. உணவுப்பொருள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க;- நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.. திருமண விழாவில் முதல்வர் பேச்சு..!
பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 2.2 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டன. 15 மாத காலத்தில் 1.50 லட்சம் மின் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதையும் படிங்க;- நான் தான் அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. கோவை தங்கம் வீட்டில் துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.!