அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த திமுக..! நிராகரித்த அதிமுக..

By Ajmal KhanFirst Published Nov 11, 2022, 12:21 PM IST
Highlights

10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து விவாதிக்க சட்டமன்ற கட்சிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில்   அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

இட ஒதுக்கீடு- அனைத்து கட்சி கூட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்புக்கு பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்ப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டமன்ற கட்சிதலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 10:30மணியளவில் நடைப்பெற உள்ளது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாக வும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுக புறக்கணிப்பு

இந்த நிலையில், 10% சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியில் இருந்து போது எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்துள்ள அதிமுக, டெல்லியில் பூம்,பூம் மாடு போல் தலையாட்டிவிட்டு தற்போது திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில்  நாளை நடைப்பெறும் சட்டமன்ற தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

மத்தியில் பூம் பூம் மாடு போல் தலையாட்டிய திமுக..! இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது- சீறிய ஜெயக்குமார்

click me!