சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Ajmal KhanFirst Published Nov 11, 2022, 11:50 AM IST
Highlights

பிரபல அரசியல் விமர்சகரும், யூ டியூப்பருமான சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள்- அவதூறு கருத்து

நீதிபதிகள் குறித்து அவதூறு செய்ததாக 6 மாத சிறை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் சிறையிலேயே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு காரணமாக சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று மாலை வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிது.

தண்டனை நிறுத்திவைப்பு

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதிக்கப்பட்ட நிலையில்,  சிறை தண்டனைக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த மனு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒத்திவைப்புக்குப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட  காலத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் சவுக்கு சங்கர் தெரிவிக்க கூடாது என நீதிபதி நிபந்தனைவிதித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

மத்தியில் பூம் பூம் மாடு போல் தலையாட்டிய திமுக..! இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது- சீறிய ஜெயக்குமார்

click me!