தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக திருமா.. பகீர் குற்றச்சாட்டை வைக்கும் பாஜக..!

Published : Sep 28, 2022, 08:35 AM IST
தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக திருமா.. பகீர் குற்றச்சாட்டை வைக்கும் பாஜக..!

சுருக்கம்

பாஜகவினரே தங்களது வீடு கார் போன்றவற்றிற்கு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அதை இஸ்லாமிய சமூகத்தின் மீது பழி போட்டு அவர்களை குற்றவாளியாக சித்தரிக்கின்றது என்று தொடர்ந்து கூறிவருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன். 

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக திருமாவளவன் பேசுவதன் மூலம் பாஜகவினர் மீதான தாக்குதல்களை தூண்டிவிடுகிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- பாஜகவினரே தங்களது வீடு கார் போன்றவற்றிற்கு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அதை இஸ்லாமிய சமூகத்தின் மீது பழி போட்டு அவர்களை குற்றவாளியாக சித்தரிக்கின்றது என்று தொடர்ந்து கூறிவருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன். 

இதையும் படிங்க;- முடிஞ்சா என்னை அரெஸ்ட் பன்னுங்க... சவால் விடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

கடந்த நான்கு நாட்களில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக இது வரை 20க்கும் அதிகமான மத அடிப்படைவாத இஸ்லாமியர்கள் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொல்.திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து  பாஜகவினர் மீது குற்றம் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதோடு, தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் முயற்சியே என்பது உறுதி.

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக திருமாவளவன் பேசுவதன் மூலம் பாஜகவினர் மீதான தாக்குதல்களை தூண்டிவிடுகிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. தமிழக அரசும், காவல்துறையும் இந்த கோணத்தில் விசாரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் முயற்சி...! எச்சரிக்கையாக இருக்க திருமாவளவன் அட்வைஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!