திமுக மாவட்ட செயலாளர்கள் 7 பேர் மாற்றமா..? சாட்டையை சுழற்றிய மு.க.ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Sep 28, 2022, 8:15 AM IST
Highlights

திமுகவின் 15வது அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், 7 மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

 திமுக உட்கட்சி தேர்தல்

திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் உட்கட்சித் தேர்தலில் முக்கிய நிகழ்வான மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக ஆட்சி அமைந்து நடைபெறுகிற முதல் தேர்தல் என்பதால் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கியிருந்தனர்.

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக திருமா.. பகீர் குற்றச்சாட்டை வைக்கும் பாஜக..!

7 மாவட்ட செயலாளர்கள் மாற்றமா..?

ஒரே மாவட்ட செயலாளர் பதவிக்கு 2 அல்லது 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  இதனிடையே வேட்புமனுத் தாக்கல் கடந்த 26 ஆம் தேதியோடு முடிவடைந்தது.  செப்டம்பர் 26 ஆம் மற்றும் செப்டம்பர் 27 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.இந்த வேட்புமனு பரிசீலனையின் போது மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்கு போட்டியிடக்கூடியவர்களை திமுக தலைமை தெர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மாவட்ட செயலாளர்காள உள்ள 7 முதல் 8 பேருக்கு கல்தா கொடுத்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க திமுக முடிவு செய்துள்ளது. எனவே நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது 7 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

30ஆம் தேதி வேட்பாளர் பட்டியல்

குறிப்பாக கோவை மாவட்டத்தில் 2மாவட்ட செயலாளர்களும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டத்தில் தலா ஒரு மாவட்ட செயலாளர்களையும்  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுதினம் (செப் 30) வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் முழுமையாக இழந்த நிலையில் அந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கோவை மாவட்டத்தில் மட்டும் 2 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்காசி மாவட்ட செயலாளரை திமுக தலைமை மாற்ற திட்டமிட்ட நிலையில் அறிவாலயத்தில் தொண்டர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் தென்காசி மாவட்டம் தொடர்பான முடிவை திமுக தலைமை இன்று மாலைக்குள் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது
 

இதையும் படியுங்கள்

எங்க அப்பா மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. துரை வைகோ அதிரடி

 

click me!