எங்க அப்பா மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. துரை வைகோ அதிரடி

By vinoth kumarFirst Published Sep 28, 2022, 6:37 AM IST
Highlights

தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன்.

வரும் காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் என துரை வைகோ நிர்வாகிகள் மத்தியில் அதிரடியாக பேசியுள்ளார்.  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த மாமனிதன் ‌ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆவணத் திரைப்படத்தை பார்த்தனர். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய துரை வைகோ;- தலைவர் இந்த இயக்கத்திற்காக 25 வருடங்கள் உழைத்து இருக்கிறார். இனி அவருக்காக நாம் உழைக்க வேண்டும்.

இதையும் படிங்க;- திமுக என்ற நச்சு மரம்.. யாராக இருந்தாலும் அநாகரீகம் ஆபாசம்.. டார்டாராக கிழிக்கும் வானதி சீனிவாசன்.

தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன். இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். இழந்ததை மீட்போம், வரலாறு படைப்போம், அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வரும் காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும்.  மற்றவர்களுக்கு கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே செல்லலாம். உழைப்பிற்கும், விசுவாசத்திற்கு மட்டும் தான் மரியாதை. வைகோ மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான் என நிர்வாகிகள் மத்தியில்  துரை வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க;-  மக்கள் ஆதரவுடன் வளரும் இசுலாமிய அமைப்புகளை குறிவைப்பதை சங்பரிவார் கும்பல் கைவிட வேண்டும்.. கொதிக்கும் வைகோ.

click me!