கூட்டணியில் கூட விடுதலை சிறுத்தை வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் உள்ளனர்..! திருமாவளவன் ஆதங்கம்

By Ajmal KhanFirst Published Nov 18, 2022, 9:30 AM IST
Highlights

6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் மறுசீராய்வு மனுவால் உச்சநீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படும் என நான் நம்பவில்லை என தெரிவித்துள்ள திருமாவளவன் எனவே விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என நம்புவதாக கூறியுள்ளார்.

மனுஸ்மிருதி-பெண்களை இழிவுபடுத்துகிறது

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றிய திருமாவளவர் பிள்ளைத்தமிழ் மற்றும் நீதியின் குரல் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புலவர் சிவலிங்கம் எழுதிய திருமாவளவர் பிள்ளைத்தமிழ் மற்றும் கவிஞர் இளமாறன் இயற்றிய நீதியின் குரல் நூல் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய  திருமாவளவன், பாஜக பேசும் அரசியலைத் தான் அச்சிட்டு கொடுக்கிறோம். பாஜக எந்த நூலை புனித நூல் என்கிறதோ அந்த நூல் தான் பெண்களை இழிவுபடுத்துகிறது.  அந்தக் கொள்கையை செவலில் அடித்தார் போல் விசிக சார்பில் நூலக அச்சிட்டுக் கொடுத்தோம். மனுஸ்மிருதி அச்சிட்டு வழங்கிய விவகாரத்தில் மூக்கருபட்டு அசிங்கப்பட்டவர்கள் சங்கிகள் தான் என்றார். மேலும் நேற்றைய ஒரு பத்திரிக்கையில்  மனுஸ்மிருதி கொடுத்ததை வேலை வெட்டி இல்லாத திருமா என எழுதுகிறான். ஆனால் மனுஸ்மிருதி கொடுப்பது தானடா எனக்கு வேலையே என குறிப்பிட்டார்.

கால்பந்து வீராங்கனை பிரியாவின் இறப்புக்கு மா.சுப்ரமணியன் பொறுப்பேற்க வேண்டும்... அண்ணாமலை அதிரடி!!


விடுதலை சிறுத்தைகளின் தொடக்க காலத்தில் பின் புலம், பரிந்துரை இல்லாமல்,ஊடக பலம் இல்லாமல் நம் உழைப்பு பற்றி சொல்ல ஆட்கள் கிடையாது. எங்கோ சிலர் செய்யும் சில தவறுகளை நம் கட்சி மீது முடிச்சு போட்டு நான் தான் தலைவன் என அவதூறு அரசியல் பரப்புவார்கள் என தெரிவித்தார். அவதூறு பரப்பும் மோசமான களம் தான் அரசியல் களம். அரசியல் என்பது அதிகாரத்தோடு தொடர்புடையதால் 360 டிகிரியிலும் பகை உண்டாகிறது. பின்புலம் இல்லாமல் ஒருவன் கிளம்பினால் எவ்வளவு அவதூறு வரும் என எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார். கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் இருப்பார்கள். கடந்த 32 ஆண்டுகளில் விசிகவின் போராட்டங்கள் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வந்ததில்லை. லட்சக்கணக்கான மக்கள் இருந்தாலும் படம் போடாமல் இருட்டடிப்பு செய்வார்கள். விசிக மீது புறக்கணிப்பு வஞ்சனை இயல்பாக இருக்கும். இந்த 32 ஆண்டுகளில் அனைத்தையும் உடைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிடு பொடி ஆக்கியுள்ளது என கூறினார்.

வரலாற்று திரிபு நூல்கள் மூலம் சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவ முயற்சி..! ஆவேசமடைந்த வைகோ

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது எதிர்பார்த்த ஒன்றுதான். சட்டப்படி எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது தான் என்றார். தீர்ப்பை உறுதிப்படுத்த ஆறு பேர் சட்டப்படி செல்ல வாய்ப்பு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு என வர வாய்ப்பு இல்லை.தமிழ்நாடு சட்டமன்றம்  தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆளுநர் தன் கடமையை செய்ய தவறிவிட்டார் என்றார். மத்திய அரசின் மறுசீராய்வு மனுவால் இந்த தீர்ப்பு ரத்து செய்யப்படும் என நான் நம்பவில்லை.விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என நான் நம்புகிறேன் என கூறினார்.

இதையும் படியுங்கள்

கல்வி நிலையங்களில் ஊடுருவும் ஆர் எஸ் எஸ்..! தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்- சீறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

click me!