அமலாக்கத் துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கையும் ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான , கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி, புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
undefined
இந்நிலையில் அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மீண்டும் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்டு அவர் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கையும் ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அடங்கிய அமர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சிபிசிஐடி தொடர்ந்த பிரதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்று தெரிவித்து ஜெகத்ரட்சகன் மீது அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து.. பாஜக நிர்வாகிக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்..!