திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறேனா..? திருமாவளவன் அதிரடி பதில்

By Ajmal Khan  |  First Published Mar 9, 2023, 9:01 AM IST

பாஜக தமிழகத்தில் வளர்ந்தால் அதிமுக நீர்த்து போய்விடும் என தெரிவித்துள்ள திருமாவளவன்  திமுக கூட்டணியில்  இருந்து விலகி அதிமுகவில் சேர உள்ளதாக சிலர் நெருப்பு அள்ளி வீசுவதாவகவும் விமர்சித்தார்.


பாஜக கூட்டணி அதிமுகவிற்கு நல்லதல்ல

தமிழகத்தில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக வளர்வதாகவும், எனவே பாஜகவை அதிமுக தவிர்க்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்து இருந்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடிக்கு ஆதரவாக வந்த நிலையில், திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தது இருந்தார். இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்து அதிமுக கூட்டணிக்கு திருமாவளவன் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ள வேண்டும். அதிமுக தோளில் ஏறி சவாரி செய்து வெற்றிபெற முயற்சிக்கிறது பாஜக. அதிமுக இல்லாமல் பாஜக தனித்து நிற்காது, பாஜக இல்லாமல் வரும் தேர்தலை சந்தித்தால்தான் அதிமுகவுக்கும் நல்லது, தமிழ்நாட்டுக்கும் நல்லது. பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லையென மீண்டும் தெரிவித்து இருந்தார். 

Latest Videos

Annamalai: இன்னும் ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் கட்சியில் இருந்து வெளியேறலாம்: அண்ணாமலை!!

அதிமுக கூட்டணியில் இணைகிறேனா.?

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே நடைபெற்ற  படத்திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் கூட்டத்தில்  பேசுகையில், ”அரசியலமைப்பு சட்டத்தை  பாதுகாக்கவும், அம்பேத்கர் வழியை பின்பற்ற அமைப்பாய் திரள்வோம்  சேரிப் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி உள்ளே நுழைய பார்க்கிறது. அவர்களை கட்சி கொடியேற்ற அனுமதிக்காதீர் என தெரிவித்தார். அதிமுகவிற்கு ஆலோசனை சொல்வதற்கு நான் ஆலோசகர் இல்லை, ஆனால் அதிமுக முதுகில் பாஜக சவாரி செய்ய நினைக்கிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்தால் அதிமுக நீர்த்து போய்விடும். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர உள்ளதாக சிலர் நெருப்பு அள்ளி வீசுகிறார்கள் எனவும்  விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் பேசினார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவினர் என்ன புகார் வேண்டும் என்றாலும் சொல்லட்டும்..! எனக்கு கவலையில்லை- கூலாக பதில் சொன்ன அண்ணாமலை

click me!