ஆதி என்ற தலித்பெண்- பகவன் என்ற அந்தணர்க்கும் பிறந்தவர் திருவள்ளுவர்.?? வவேசு, RN ரவியை வச்சு செய்த கி.வீரமணி

By Ezhilarasan Babu  |  First Published Sep 1, 2022, 1:31 PM IST

திருக்குறள் குறித்து ஆளுநர் ஆர்.என் ரவி  ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பலரும் பல வகையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இந்த வரிசையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அரட்டை அடிப்பது ஆளுநருக்கு அழகல்ல  என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:-


திருக்குறள் குறித்து ஆளுநர் ஆர்.என் ரவி  ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பலரும் பல வகையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இந்த வரிசையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அரட்டை அடிப்பது ஆளுநருக்கு அழகல்ல  என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:-

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கிறிஸ்தவ மதபோதகர் ஜி.யு போப் மொழிபெயர்த்த திருக்குறள் பற்றிய தனது பார்வையாக வெளியிட்டுள்ள விமர்சனம் பொதுவெளியில் சர்ச்சையாகியிருக்கிறது, டில்லியில் தமிழ் பல்கலைக்கழகம் 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,  இதையொட்டி அதன் லோதி சாலை பள்ளியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக ஆளுநர் திறந்து வைத்து உரையாற்றினார், அப்போது திருக்குறள் தொடர்பாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் திருக்குறளின் ஒவ்வொரு பொருளும் கோட்பாடு நடத்தை நெறிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன,

Tap to resize

Latest Videos

ஆனால் திருக்குறளில் இவற்றைவிட மிக மிகப் பெரியது உள்ளது. அது தர்ம வேதத்தை உள்ளடக்கியது, திருக்குறளில் முதலாவது குறலே ஆதிபகவன் பற்றியது, அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று ஒரு மாணவர் படிக்கிறார், அதில் தொடர்ச்சியாக வரும் பத்து குறள்களில் அடிப்படையாக இருப்பவை அந்த ஆதிபகவன் மீதான பக்தியை பற்றியது, ஆதிபகவன் என்ற தமிழ்ச்சொல்லை மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், அஸ்ஸாமி என எல்லா இந்திய மொழிகளிலும் உணரலாம், அதைச் சொல்லும்போதே ஆதிபகவன் என்பது யார் என தெரிந்துவிடும், ரிக் வேதத்திலும் ஆரம்பத்தில் ஆதிபகவன் என்று தொடங்குகிறது, அந்த ஆதிபகவன் தான் ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார்.

இதையும் படியுங்கள்: இலக்கு தமிழ்நாடு தான்..! ஏர்போட்டில் இருந்து இளையராஜாவுடன் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ வைரல்!

பிறகு இந்த பூமியை படைத்து அதன் எல்லாவற்றையும் நிலை நிறுத்தினார். இதைத்தான் திருவள்ளுவர் சாமானிய மனிதனுக்கும் புரியும் வகையில் தமது குறளில் குறிப்பிட்டுள்ளார். நமது மொழிக்கு அடிநாதமாக இருப்பது எழுத்துக்கள், அந்த எழுத்துக்கள் இல்லை என்றால் நம்மால் எழுத முடியாது படிக்க முடியாது, எந்த ஒரு வார்த்தையும் பேச முடியாது, அந்த எழுத்துக்கள் தான் நமது எழுத்துக்கும் பேச்சுக்கும் அடிப்படை, அதுபோல ஆதிபகவன் தான் எல்லாப் படைப்புக்கும் தொடக்கமாக இருக்கிறார் என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார், ஆளுநராக இருக்கக்கூடிய ஒருவரின் வேலை அரசமைப்புச் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளது. அதையும் சரியாக செய்வதில்லை,எதிலும் ஏட்டிக்குப் போட்டியாக பேசுவது, நடப்பது என்பது ஆளுநர் ரவியின் வழமையாகிவிட்டது.

பொதுவாக திருக்குறள் என்றாலே பார்ப்பனர்களுக்கு வேப்பெண்ணெய் சாப்பிட்ட மாதிரிதான், ஆதி பகவானுக்கு ஆளுநர்  கூறும் விளக்கம் ஒருபுறமிருக்கட்டும், வ வே சு ஐயர் the kural or maxims of Thiruvalluvar  என்ற பெயரில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார். அதில் திருவள்ளுவர் ஆதி என்ற பறைச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பனருக்கும் பிறந்தவர் திருவள்ளுவர் என்று எழுதியுள்ளார்.  திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் உள்ள மேன்மையை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதே பார்ப்பனர்களின் நிலைப்பாடு.

இதையும் படியுங்கள்: இந்துக்களுக்கு வாழ்த்து கூறாமல் ஸ்டாலின் மத அரசியல்... கமலாலயத்தில் கொதித்த அண்ணாமலை.

திருக்குறளில் எந்த இடத்திலும் கடவுள் மதம் என்ற சொற்கள் இடம் பெறவில்லை, கடவுள் வாழ்த்து என்று கூறப்படும் முதல் அதிகாரமே திருவள்ளுவர் எழுதியது கிடையாது என்று வா உ சிதம்பரனார் ஆய்வு செய்துள்ளார். பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் வேதங்கள் எங்கே? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் திருக்குறள் எங்கே? அரட்டை அடிப்பது ஆளுநருக்கு அழகல்ல.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!