ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தியும், திமுக மாநில இளைஞரணி இணைச் செயலாளருமான பைந்தமிழ்பாரி - கீதா தம்பதியின் மகளுமான ஸ்ரீநிதிக்கும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மதியழகன் - விஜயா தம்பதியின் மகனுமான கெளசிக் தேவ் ஆகியோரது திருமண விழா கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு மாலைகளை எடுத்து கொடுத்து திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து மண மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தி பேசினார்.
undefined
இதையும் படிங்க;- ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் விலகுமா? முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்த ஆறுமுகசாமி ஆணையம்.!
அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின்;- ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அதிமுக ஆட்சியில் ஒப்புக்காக நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆணையத்தைத ஒழுங்குபடுத்தி உரிய விசாரணை நடைபெற்றது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் சில பிரச்சனைகள் உள்ளன. அதை இங்கே சொல்ல மாட்டோம் பேரவையில் சொல்வோம்.
இதையும் படிங்க;- ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்
தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கையும் வந்திருக்கின்றது. அதையும் சட்டமன்றத்தில் வைக்க இருக்கின்றோம். சட்டமன்றத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்கின்றார். பெண்களுக்கு இலவச பேருந்து, பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளது. குடும்பப் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும். நிதி நிலைமை சரியானவுடன் வழங்கப்படும். கலைஞரின் மகன் சொன்னதை செய்வோம் என அவர் தெரிவித்தார்.