தனது கணவர் அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என தாம்பரம் காவல் ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இல்லம் அமைந்துள்ளது. இவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும், மாநில பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை அக்டோபர் 21ம் தேதி கானத்தூர் காவல் நிலையத்தினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து போக்குவரத்து போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டது. உலக செஸ் சாம்பியன் சிப் போட்டி விளம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை மறைத்தது ஆகிய வழக்குகளில் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க;- புழல் சிறையில் 120 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை: ஜாமீன் மனுவில் அமர்பிரசாத் ரெட்டி தகவல்!
இந்நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல்துறையினர் முயற்சிப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்கக் கோரி, அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லாத நிலையில், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியான திமுக-வின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால், தனது கணவர் மீது பொய் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால், அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்கு பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். தனது கணவர் அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க;- இதே பொழப்பா போச்சு! நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரைக்குறைவாக பேசும் RS.பாரதி! வானதி சீனிவாசன்!
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தனது கணவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விடுவார் என்ற அச்சத்தில் மனுதாரர் முன்கூட்டியே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால், தற்போதைய நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறை முடிவெடுப்பதற்கு முன்பாக முன்கூட்டியே தொடரப்பட்ட வழக்கு என கூறி நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.