ஆளுநரை விமர்சிப்பதும், வழக்கு தொடர்வதும் தான் திராவிட மாடல் ஆட்சி என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் நகர செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர், பேரூராட்சி கழக செயலாளர், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பூத் கமிட்டி பொறுப்பாளர் அதிமுக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
முன்னதாக அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை வரவேற்கும் வகையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
கோவையில் ஜூனியர் மாணவர்களுக்கு மொட்டை அடித்த விவகாரம்; காவல்துறை பரபரப்பு எச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், அதிமுக கட்சியின் உச்ச பட்ச அமைப்பு பொது குழு தான். பொது குழு உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றபட்டு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து உள்ளது. அதிமுக கட்சி சின்னம், கொடி, லெட்டர் பேடு உள்ளிட்டவை தொடர்பாக உயர் நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
திரும்ப திரும்ப இந்த விவகாரத்தை நீதி மன்றத்திற்கு கொண்டு வராதீர்கள் என்று ஒ.பி.எஸ் க்கு உயர்நீதிமன்றம் சாட்டையடியாக ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. திமுக அமைச்சர் எ.வ.வேலு இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. உப்பு தின்னவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதல் திமுக ஆட்சிக்கும், ஆளுநருக்கும் மாறுபட்ட கருத்து இருந்து கொண்டு இருக்கிறது.
உதயநிதி சனாதனத்தை ஒழிப்பது இருக்கட்டும் முதலில் கொசுவை ஒழியுங்கள் - கிருஷ்ணசாமி விமர்சனம்
ஆளுநர்கள் அரசுக்கு அப்படியே செவி சாய்ப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதிமுக ஆட்சியிலும் சில ஆளுநர்கள் முரண்பாடுகளுடன் இருந்தாலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிக நேர்த்தியாக கொண்டு சென்றார். திமுகவை போல ஆளுநர் மீது விமர்சனம் செய்வது, வழக்கு போடுவது, எந்த ஆட்சியிலும் இல்லை. இது தான் திராவிட மாடல் அரசு என்றார்.