அறநிலைத்துறையை கலைப்பதா.? சேகர் பாபு நன்றாகத்தான் செயல்படுகிறார்- அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ பதில்

Published : Nov 08, 2023, 01:02 PM IST
அறநிலைத்துறையை கலைப்பதா.? சேகர் பாபு நன்றாகத்தான் செயல்படுகிறார்- அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ பதில்

சுருக்கம்

 விஜய் நடித்த லியோ படத்துக்கு கூட்டம் குறைந்து விட்டது, ஆனால் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளதாக செல்லூர் ராஜூ விமர்சித்தார். 

ழையில் மதுரை பாதிப்பு

மதுரை அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேரில் பார்வையிட்டு, சாலை சரிசெய்ய அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். இதனை செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு, "மதுரையில் பல்வேறு சாலைகள் மழையால் சேதமடைந்தன, சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி சீரமைக்கவில்லை, மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவுகிறது, மதுரையில் உள்ள 2 அமைச்சர்கள் ஒன்றும் செய்யவில்லையென கூறியவர்,  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 2 அமைச்சர்களும் மேற்க்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். 

வைகையை தேம்ஸ் நதி போல் மாற்றியிருப்போம்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வைகையாற்றை தேம்ஸ் நதிக்கரை போல மாற்றி இருப்போம், உள்ளூரில் உள்ளவவனுக்கு சோறு போட வக்கில்லை, வெளியூர்க்காரனுக்கு பாலும், பன்னீர், பஞ்சு மொத்தை தர போகிறார்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு மின் கட்டணத்தை குறைக்க வழியில்லை, உள்நாட்டு உற்பத்திக்கு உதவி செய்ய முடியவில்லை, இதில் வெளிநாடு முதலீடுகளை எப்படி கொண்டு வரப் போகிறார்கள், விஜய் நடித்த லியோ படத்துக்கு கூட்டம் குறைந்து விட்டது, ஆனால் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது, 

சேகர்பாபு நன்றாக செயல்படுகிறார்

அறிநிலையத்துறையை கலைக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்திருப்பது தொடர்பான கருத்திற்கு பதில் அளித்த அவர், அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும், பெரிய கோவில்களின் வருவாயில் தான் சிறு கோவில்கள் செயல்படுகிறது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார், அண்ணாமலை சொன்னதற்க்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா?, அறநிலையத்துறையில் தவறு இருந்தால் சுட்டி காட்டலாம், யார் யாரோ ஆட்சிக்கு வர போகிறோம் என சொல்லும் போது விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை, 2026 ல் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக கொண்ட அதிமுக ஆட்சி அமைக்கும் என செல்லூர் ராஜூ கூறினார்.

இதையும் படியுங்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க களத்தில் இறங்கிய ஓபிஎஸ்..! ஒப்புதல் தந்த உயர் நீதிமன்றம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!