நாடு முழுவம் 43,000 ஆயிரம் கற்பழிப்பு வழக்குகள்.. வெறும் 3,814 வழக்குகளில் மட்டுமே தண்டனை. அதிர்ச்சி தகவல்

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2021, 1:04 PM IST
Highlights

அந்தவகையில் நாட்டில் நடைபெறும் சிறு குற்றங்கள் முதல் கொடூரமான குற்றங்கள் வரை குற்ற ஆவணக் காப்பகங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு அதில் எத்தனை குற்றங்களில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை குற்றங்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை என்பது போன்ற புள்ளி விவரங்களை ஆண்டு தோறும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு வருகிறது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 43 ஆயிரம் கற்பழிப்பு வழக்குகள் பதிவானதாகவும், அதில் விசாரணை நடத்தப்பட்டு வெறும் 3,814 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ச்சி அடைந்து வரும் அதே நேரத்தில், மறு புறம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குற்ற சம்பவங்களை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எந்த வழக்குகளை காட்டிலும் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளே அதிக அளவில் பதிவாகி வருகிறது.

அந்தவகையில் நாட்டில் நடைபெறும் சிறு குற்றங்கள் முதல் கொடூரமான குற்றங்கள் வரை குற்ற ஆவணக் காப்பகங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு அதில் எத்தனை குற்றங்களில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை குற்றங்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை என்பது போன்ற புள்ளி விவரங்களை ஆண்டு தோறும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு வருகிறது. இந்த வகையில்,  கடந்த ஆண்டு 43 ஆயிரம்  கற்பழிப்பு வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டதில் வெறும் 3,814 வழக்குகளில் மட்டுமே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  அதைபோல விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 50,258 கொலை வழக்குகளில் வெறும் 24,015 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திருக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் 2 ,32, 859 வழக்குகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதல் கொடூர குற்றங்களாக கருதப்படும் கொலை, கற்பழிப்பு வழக்குகள் 39 சதவீதம் முதல் 41 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் நாட்டில் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக மொத்தம் 81,846 வழக்குகளில் 43,063 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அதிலும் குறிப்பாக வெறும் 4,613 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இன்னும்  5 லட்டத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

 

click me!