
அதிமுக பொதுக்குழு நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்ற பரபரப்பு நிலவி வரும் நேரத்தில், தீர்ப்பு எப்படி இருந்தாலும் நமக்கு சாதகமாக தான் வரும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கத் தயாராகி வருகின்றனர்.
ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். தீர்ப்புக்குப் பிறகே அதிமுக பொதுக்குழு நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்பது தெரிய வரும்.
இதையும் படிங்க;- ரோசம், மானம் இருக்கா.. வாழவே தகுதி இல்லாதவர் கே.பி முனுசாமி -டாராக கிழித்த கோவை செல்வராஜ்
ஆனாலும், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை இபிஎஸ் தரப்பு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுக்குழு நடத்த அனுமதி அளித்து தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், ஏற்கெனவே தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஜூன் 22ம் தேதி அளித்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை அந்த கட்சியால் திருத்தம் செய்ய முடியும்.
இதையும் படிங்க;- ஒபிஎஸ் சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் இபிஎஸ்.. முக்கிய பிரமுகர்கள் திடீர் ஆதரவு.. உயரும் எண்ணிக்கை.!
பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் கட்சிதான். எனவே, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உத்தரவிட்டிருந்தார். அந்த நீதிபதி முன்னிலையிலேயே திரும்பவும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. மேலும், தங்கள் தரப்பில் கடந்த வழக்கை விட வலிமையான வாதங்களை முன் வைத்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நம்பிக்கையாக இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- எனக்கு பல கோடி கடன் இருக்கு.. இந்த மருத்துவமனையை பேங்க்ல லோன் போட்டு தான் கட்றேன்.. முன்னாள் அமைச்சர் காமராஜ்