அதிமுக உடைந்ததற்கு இவர்கள் தான் காரணம்... காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிரடி!!

By Narendran SFirst Published Jul 10, 2022, 11:22 PM IST
Highlights

அதிமுக உடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ காரணமல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

அதிமுக உடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ காரணமல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், வலிமையான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று மூன்றாக உடைந்து இருப்பதற்கு யார் காரணம் என்றால் அந்த கட்சியில் உள்ள ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ காரணமெல்ல. அதேபோல் சசிகலாவும் காரணமல்ல. அதிமுக மூன்றாக உடைந்ததற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மட்டுமே தான் காரணம். வலுவான கட்சிகளை பலவீனப்படுத்துவதன் மூலமே அவர்கள் காலூன்ற முடியும் என்பதற்காக இந்த வேலையை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி பிளவு பட்டால் அண்ணா திமுக மூலம் ஆர் எஸ் எஸ் தமிழ்நாட்டில் காலூன்றி விடும்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் அண்ணன் நான்.. சொத்தில் 50 சதவீத பங்கு கொடுக்கணும்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.!

Latest Videos

மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளில் உள்ளவர்கள் இதனை உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். காட்டிக் கொடுப்பவர்களை கண்டுபிடித்து அந்த கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற கொள்கையில் பாஜக செயல்பட்டு வருகிறது. பொறுப்பற்றவர்களுடைய பொறுப்பற்ற பேச்சுக்கு நாம் பதில் அளிக்க வேண்டியதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள கட்சிகள் அடிப்படைக் கொள்கையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. மதச்சார்பற்ற கூட்டணியின் நோக்கம் தமிழகத்தை மேம்படுத்துவது தான்.

இதையும் படிங்க: ஒரு ரப்பர் ஸ்டாம்பால் அரசியலமைப்பை காப்பாற்ற முடியுமா.? திரெளபதி முர்மு மீது யஷ்வந்த் சின்ஹா மறைமுக அட்டாக்!

தமிழ்நாட்டில் தான் பலம் வாய்ந்த மதசார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் மூன்று தீர்மானங்கள் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைத்து எப்படியாவது குள்ளநரி தந்திரத்தோடு தமிழ்நாட்டில் காலூன்றி விட வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. காங்கிரஸ் தோழர்கள் கொள்கை ரீதியான போராளிகளாக மாற வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த கருத்து வரவேண்டுமென்ற சட்டமில்லை. மாறுபட்ட கருத்து இருக்க வேண்டும் என்பது தான் ஜனநாயகத்தின் மாண்பு. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்கு மதிப்பளித்து அவர்கள் சொல்லும் வேட்பாளர்களை ஆதரிப்போம் என்று தெரிவித்தார். 

click me!