இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடுங்கள்... மு.க.ஸ்டாலினுக்கு அர்ஜூன் சம்பத் வேண்டுகோள்!!

By Narendran SFirst Published Jul 10, 2022, 11:14 PM IST
Highlights

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்வருர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்வருர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு துறைகளில் அந்தந்த மாநிலங்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் 75 வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை செய்யாமல் இருக்கின்றனர். தமிழக அரசு தனது கடமையிலிருந்து தவருகிறது. இது எனது குற்றச்சாட்டு. இந்த 75 ஆண்டு விழாவை தமிழக அரசு முழுவதும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோளாக வைக்கின்றேன்.

இதையும் படிங்க: தனியாருக்கு மோடி விற்றால் கூப்பாடு... பேருந்துகளை ஸ்டாலின் விற்கலாமா.? பொளந்துகட்டும் கிருஷ்ணசாமி!

தென் தமிழகத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆந்திராவை சேர்ந்தவனுக்கு எம்பி பதிவு அளிக்கப்பட்டுள்ளது. தமிழருக்கு தவிர மற்ற மாநிலங்களில் இதை கட்சி பாகுபடு என்று வரவேற்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுத்தது அவர் தலித் அவருக்கு கோடிக்கண ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே பிஜேபி வாக்களிப்பார்கள் எனவே,கொடுத்து விட்டார்கள் எனக் கூறுகின்றனர்.\

இதையும் படிங்க: ராஜபக்சே குடும்ப கதி.. திமுகவுக்கும் துணைபோகும் விசிகவுக்கும் எச்சரிக்கை.. திருமாவளவனுக்கு பாஜக பதிலடி!

தமிழகத்தில் மட்டும் தான் எது செய்தாலும் ஜாதி எது செய்தாலும் எதிர்ப்பு இந்த மாதிரி ஒரு சூழலை இந்த திராவிட மாடல் சிந்தனையை இந்த பூமியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் கல்வித்தர மிகவும் மோசமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழகத்திலே புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் தான் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை வளர்ச்சி அடையும். தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்க மகேஷ் பொய்யா மொழி உதயநிதியை அமைச்சராக்க வேண்டும், அவருடைய ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்களை எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

click me!