Seeman: ஒரே நாளில் கூண்டோடு காலியான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.! சீமான் ஷாக் - காரணம் என்ன தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Apr 7, 2024, 8:11 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகிய சம்பவம் சீமானை அதிர்ச்சியடைவைத்துள்ளது.
 


சீமானுக்கு தொடரும் நெருக்கடி

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக. அதிமுகவிற்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவாகி வருகிறது. வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை எதிர்கொண்டு கணிசமாக வாக்குகளை பெற்று வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தனித்து களம் காண்கிறது. இந்தநிலையில்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அடுத்தடுத்து வரும் நெருக்கடியால் சிக்கல் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் நடிகை விஜயலட்சும் வீடியோ வெளியிட்டு தொடர்ந்து சீமானை மிரட்டி வருகிறார். 

Tap to resize

Latest Videos

கட்சி தாவும் நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சியின் நம்பிக்கையாக இருந்த கரும்பு விவசாயி சின்னம் பறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து வேறு ஒரு கட்சிக்கு பல்டி அடித்து வருகின்றனர். அந்த வகையில்,  கட்சியின் மூத்த நிர்வாகியாகவும் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ராஜா அம்மையப்பன் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சூழ்நிலையில் சீமானுக்கு மீண்டும் ஷாக் கொடுக்கும் வகையில், நாம் தமிழர் கட்சி தமிழர் கட்சியில் இருந்து தியாகராயர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளார். 

கூண்டோடு விலகிய நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சி தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி தலைவர் மு.ராஜா, பொருளாளர் மு.முருகன் ஆகியோர் விலகியுள்ளனர். மேலும் .  தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் கிஷோர் பிரபாகரன், தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் விக்னேஷ்வரன் ஆகியோரும் விலகியுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. முக்கியமாக சீமானின் மனைவி கயல்விழியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கட்சியில் அதிகரித்து வருவதாகவும், நிர்வாகம், கட்சியின் கட்டமைப்பு, வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் அவர் தலையீடு அதிகமாக உள்ளதாகவும் கட்சியில் இருந்து விலகியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தை குறி வைத்து களம் இறங்கும் பாஜக தலைவர்கள்... ஒரே நாளில் 4 இடங்களில் சூறாவளியாக சுற்றும் ஜே.பி நட்டா

click me!