கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள்.. பூசாரியின் தட்டில் காசு போடுங்கள் என சொன்னவர் நிர்மலா சீதாராமன்.! கனிமொழி

By Ajmal Khan  |  First Published Apr 7, 2024, 7:05 AM IST

வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் அதையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்த கனிமொழி,  வேலை கேட்டால் பக்கோடா போடுங்கள் என்று பாஜக அமைச்சர்கள் சொல்வதாக விமர்சித்தார். 


பாஜக வாக்குறுதி என்ன ஆச்சு.?

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி - நாலு முக்கு ரோடு பகுதியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர்,

Tap to resize

Latest Videos

 கடந்த 10  வருடங்களாக ஆட்சியில் உள்ள பாஜக தேர்தல் அறிக்கையில் கூறிய ஏதாவது ஒரு வாக்குறுதியாவது நிறைவேற்றி இருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார். 15 லட்சம் ரூபாயும் வங்கி கணக்கில் வரவில்லை, வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் அதையும் நிறைவேற்றவில்லை.  வேலை கேட்டால் பகோடா போடுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார், அதுவும் வேலைதான் என்கிறார். 

இந்திய எல்லையை கைப்பற்றிய சீனா

இந்திய எல்லையில் சீன அரசு ஒரு சில கிராமங்களை கைப்பற்றி விட்டதாக சீன மொழியில் அந்த பகுதிகளுக்கு வந்து பெயர் பலகை வைத்துவிட்டு இந்த இடத்தை நாங்கள் கைப்பற்றி விட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவே பெரும் பரபரப்பாக பேசப்படும் நிலையில் சீன நாட்டின் நடவடிக்கைக்கு எதிராக பிரதமர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்திய எல்லையையே காப்பாற்றுவதற்குப் பிரதமருக்கு முடியவில்லை. தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு வந்த போது ஒரு ரூபாய் நிவாரணம் கொடுக்கவில்லை, அணைத்து நிவாரணமும் கொடுத்தது நம்முடைய முதலமைச்சர் மு க ஸ்டாலின்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கே வந்தார். வந்து மக்களைப் பற்றி எந்த கேள்வி கேட்கவில்லை. மக்களுக்காக என்ன தேவை என்றும்  கேட்கவில்லை.

அரசியல் அமாவாசை பழனிசாமி மோடியின் ‘B-டீம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பூசாரி தட்டில் காசு போடுங்கள்

மக்களுக்கு உணவு வேண்டுமா, நிவாரணம் வேண்டுமா என்பதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. இங்கு ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்குச் சென்று நிதி அமைச்சர், அவ்வளவு மழை வெள்ளத்தில் கோவிலை சுற்றி சகதியாக இருக்கிறது என்று அதற்கு ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் செய்து விட்டு, எல்லாம் அதிகாரி திட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு வந்தவர்களிடம் இனிமேல் இங்கே இருக்கக்கூடிய பூசாரியின் தட்டில் காசு போடுங்கள், கோவில் உண்டியல் காசு போடாதீர்கள் என்று சொல்லிட்டு போனார்கள். தமிழ்நாட்டிற்கு நிதி கொடுப்பார் என்று பார்த்தால் இன்றைக்கு வரைக்கும் ஒரு ரூபாய் நிதி வரவில்லை.என கனிமொழி விமர்சித்தார்.

click me!