கேப்டன் மறைந்து 100 நாட்கள் ஆகிடுச்சு.. தாயும் என்னுடன் வரவில்லை.. தந்தையும் இல்லை- விஜயபிரபாகர் உருக்கம்

By Ajmal Khan  |  First Published Apr 5, 2024, 3:16 PM IST

கேப்டனின் நீண்ட நாள் கோரிக்கை ‌ ஆசை என்னவென்றால் தேமுதிகவிலிருந்து ஒருவர் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. கடைசிவரை அவரது ஆசை நிறைவேறவில்லை என விஜயபிரபாகர் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தார். 


கேப்டன் மறைந்து 100 நாட்கள் ஆகிவிட்டது

விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சாத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பிரச்சாரத்திற்கு வந்த விஜய பிரபாகரனுக்கு கிராம மக்கள் ‌ உற்சாக வரவேற்பளித்தனர்.  அதனைத் தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய விஜய பிரபாகரன், வரும் மக்களவைத் தேர்தலில் நிச்சயம் அதிமுக- தேமுதிக கூட்டணி விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் அதிமகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.  கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் 100  நாள்கள் ஆகிறது.

Latest Videos

undefined

கேப்டன் இல்லாத நூறு நாட்கள் எனக்குள் இன்பங்கள் சோகங்கள் இருந்தாலும் அதனை எனக்குள் அடக்கி வைத்து கொண்டு மக்கள் முன்னாடி தைரியமாக வந்து வாக்குகளை சேகரித்து வருகிறேன்.  கேப்டனின் நீண்ட நாள் கோரிக்கை ‌ ஆசை என்னவென்றால் தேமுதிகவிலிருந்து ஒருவர் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. கடைசிவரை அவரது ஆசை நிறைவேறவில்லை. அதுபோல் அவரும் இதனை பார்க்க முடியாமல் போய்விட்டார். 

தாயும் வ்ரவில்லை. தந்தையும் இல்லை

கேப்டன் எங்களுக்கு கொடுத்த தைரியம் தான். மக்களுக்காக மீண்டும் அதிமுக, தேமுதிக ‌ கூட்டணி அமைத்துள்ளது. கேப்டன் மறைந்தாலும் இன்று வரை கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். எனது தாய் என்னுடன் பிரச்சாரத்திற்கு வரவில்லை, தந்தை‌ என்னுடன் இல்லை, ‌

உங்களை நம்பி ‌ என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். நீங்கள் தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் என்னுடைய சொந்தங்கள். கேப்டன் மகன் நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாக  சேவை செய்யத்தான் இங்கு வந்திருக்கிறேன். கேப்டனின் 100 வது நாள் தினமான இன்று அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த முடியாமல் கூட ‌ உங்களை சந்திக்க வந்துள்ளேன். 

கேப்டனின் ஆன்மா சாந்தி அடையும்

கேப்டனின் ஆசி மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்க வேண்டும் என்பார். அவரது ஆசையை பூர்த்தி செய்வதற்காகத்தான் ‌ அவரது மகனாக விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ‌ சிறிய வயதில் போட்டியிடுகிறேன்.  நான் தனியாக வெற்றியை நோக்கி போக முடியாது. மக்களாகிய நீங்கள் என்னுடன் ‌ இருக்க வேண்டும். உங்களது ஆதரவும் அன்பும் எனக்கு வேண்டும் அதற்கு மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் ‌ கேப்டனின் ஆத்மா சாந்தியடையும் என விஜயபிரபாகர் உருக்கமாக பேசினார். 

இதையும் படியுங்கள்

EPS : அதிமுகவிற்கு அதிகரிக்கும் ஆதரவு.. எடப்பாடியை நேரடியாக சந்தித்த விவசாய அமைப்புகள்

click me!