EPS : அதிமுகவிற்கு அதிகரிக்கும் ஆதரவு.. எடப்பாடியை நேரடியாக சந்தித்த விவசாய அமைப்புகள்

By Ajmal Khan  |  First Published Apr 5, 2024, 2:09 PM IST

மக்களவைத் தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது இது தொடர்பாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து நேரில் ஆதரவு தெரிவித்தனர். 


நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தநிலையில் நேற்று அதிமுகவிற்கு மாவீரன் மஞ்சள் படை சார்பாக  காடு வெட்டி குருவின் மகன் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

 இந்தநிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னுசாமி, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

 விவசாய அமைப்புகள் ஆதரவு

விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி தந்ததுடன், நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னெடுப்பு மேற்கொண்டவர் அத்திக்கடவு அவிநாசி திட்டம்  காவேரி குண்டாறு இணைப்பு திட்டம், தென்பெண்ணை ஆற்றின் மூலம் ஏரி குளங்களை நீர் நிரப்பும் திட்டம்,  மேட்டூரில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு ஏரி குளங்களுக்கு நிரப்பு திட்டம். விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செய்து விவசாயிகளின் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடி கே. பழனிச்சாமி என்பதால், அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஒரே கட்சி ஒரே தலைவர் என்பதே மோடியின் திட்டம்.! 2024க்கு பிறகு மீண்டும் தேர்தல் நடக்குமா.? -ப.சிதம்பரம் கவலை

click me!