கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 கோடியை கண்ணாலே பார்த்திருக்க மாட்டார்கள் அவர்கள் 11 கோடி வருமான வரி கட்ட வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தேர்தல் நடக்குமா.?
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நாடாளுமன்ற வழக்கமான தேர்தலாக நினைக்க கூடாது. மிகுந்த கவலை படுகிறேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்குப்பிறகு இன்னொரு தேர்தல் வருமா? வராதா என்ற கவலை எனக்கு இருக்கிறது.
சுதந்திரம் இருக்கும் போதுதான் சுதந்திரத்தை காப்பாற்ற முடியும். ஜனநாயகம் இருக்கும்போது தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். உயிர் போன பிறகு உயிரை காப்பாற்ற முடியாது. உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். பாஜகவை நரேந்திர மோடியை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்.
ஒரே கட்சி ஒரே தலைவர்
மன்மோகன் சிங் வாஜ்பாய் கூட பிரதமராக இருந்துள்ளனர். பொறுப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி மக்களுக்கு பல நன்மைகளை செய்தார்கள். நன்மைகள் செய்த போது சில தவறுகள் நடந்திருக்கலாம் ஆனால் நரேந்திர மோடிக்கு நன்மை செய்வது அவருடைய நோக்கமில்லை. ஆர் எஸ் எஸ் ஐ பின்பற்றி ஒரே கட்சி ஒரே தலைவர். என்பதை மோடி கடைப்பிடிக்கிறார். வர்ணாசிரம தர்மத்தில் தான் நம்பிக்கை இருக்கிறது. அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லை அவர்களுக்கு என்றும் ஹிந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். என்பது அவர்களின் நோக்கம்
இஸ்லாமிய மதத்தை கிறித்துவ மதத்தை மற்ற மதங்களை பின்பற்றுபவர்களுக் கு முழு உரிமைகள் கிடையாது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பேச்சு. பாஜகவிற்கு தடை திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தான் அதனால்தான் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் மாநில கட்சிகளை ஒடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் கோலோச்ச முடியும் என பாஜக நினைக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி கிடையாது ஆனால் வருமான வரி கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்குகிறார்கள். வருமான வரிதுறை மூலம் நோட்டிஸ் வழங்குகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 கோடியை கண்ணாலே பார்த்திருக்க மாட்டார்கள் அவர்கள் 11 கோடி வருமான வரி கட்ட வேண்டுமாம்.
ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை
இரண்டு முதலமைச்சர்களை கைது செய்திருக்கிறார்கள். அமைச்சர்களை கைது செய்து இருக்கிறார்கள். சினிமாவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. தேர்தல் எதற்கு சட்டமன்றம் எதற்கு.? ஆளுநர் எதற்கு? முதலமைச்சர் பதவி எதற்கு.? மத்திய அரசு கைது செய்து முதலமைச்சரை சிறையில் அடைக்குமா.! ஜனநாயகம் எப்படி பிழைத்திருக்கும். வெள்ளம் வந்தபோது மோடியின் விமானம் சென்னை, தூத்துக்குடிக்கு பறக்காதா என கேள்வி எழுப்பிய அவர் தமிழ்நாட்டிற்கு திடீர் என வருகிறீர்களே.? பேரிடர் நிதி எதற்காக உருவாக்கினோம். பல்லாயிரம் கோடி ரூபாய் அதில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு காசு கூட வெள்ள நிவாரணத்திற்கு தரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை. மோடி தமிழகத்திற்கு என்ன செய்தார்.? வேலையில்லாமையை பெருக்கினார்.
விலைவாசியை உயர்த்தினார் இதைத்தான் அவர் செய்தார். வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவேன் என்று கூறினார்கள் ஏன் உருவாக்கவில்லை. மத்தியில் உள்ள பாசிச ஆட்சியை அகற்ற வேண்டுமா வேண்டாமா என்றும் இந்த கேள்விகளுக்கு நல்ல பதில் சொல்வதற்காக ஜனநாயகத்தை காப்பாற்ற ஜனநாயக விரோத அரச அகற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லரசு தொடர ஏப்ரல் 19ஆம் தேதி கை சின்னத்திற்கு வாக்களித்து இந்தியா கூட்டணிக்கு வெற்றி தர வேண்டும் என ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்