திமுக அரசு இப்போதாவது பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா..? இல்லை ஏமாற்றுவீர்களா..? அண்ணாமலை கேள்வி..

By Thanalakshmi VFirst Published May 21, 2022, 8:32 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்குமா? என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

பெட்ரோல் மீதான் கலால் வரியை லிட்டருக்கு ரூ8 யும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ6 யும் குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் கலால் வரி குறைப்பால், பெட்ரோல் மீது ரூ.9.50 ம் , டீசல் மீது ரூ.7 ம் விலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு 12 கேஸ் சிலண்டர்களுக்கு தலா ரூ200 மானியம் வழங்கப்படும் என்றும் நாட்டில் சிமெண்ட் விலையை குறைக்கவும் சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும். சில உருக்கு மூகப்பொருட்களின் இறக்குமதி வரியும் குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைந்ததற்கு பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். 

மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை குறைத்த மாண்புமிகு பிரதமர் திரு அவர்களுக்கு நன்றி.

கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க் கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என
தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

— K.Annamalai (@annamalai_k)

இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை  குறைத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க் கட்சிகள், குறிப்பாக திமுக  அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8, டீசல் ரூ.6 குறைப்பு.. அமைச்சர் அறிவிப்பு

click me!