திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையா? ஆளுநர் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!!

By Narendran S  |  First Published May 5, 2023, 12:17 AM IST

திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். 


திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாஜக தலைவர் பதவிக்காக ஆளுநர் வந்துள்ளாரா? ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு ஆர்.என். ரவி வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்கு வந்தவர் போலத்தான் உணர முடிகிறது. கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ்பவனில் அமர்ந்து அரசியல் செய்கிறார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... காங். தலைவர் டி.கே.சிவக்குமார் அளித்த வாக்குறுதி என்ன தெரியுமா?

Latest Videos

ஆளுநரின் உரைகள் மாநிலத்தின் அமைதியை சீர்குலைப்பதாகவே அமைந்துள்ளது என்பதே உண்மை. கனியாமூரில் நடந்த வன்முறையை துப்பாக்கிச்சூடு இன்றி கட்டுப்படுத்தினோம் என்பதே முதன்மையானது. கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஆரியத்துக்கு ஆலாபனை பாடும் ஆளுநர், திராவிட மாடலுக்கு தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார், சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார். 

இதையும் படிங்க: ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா சர்வே: கர்நாடகா தேர்தல் களம் மாறுகிறதா? பாஜகவுக்கு கைகொடுக்கும் 2 மண்டலங்கள்!!

ஆளுநர் பணியைத் தவிர அனைத்து பணிகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி செய்கிறார்; சனாதன வகுப்பெடுக்கிறார். அரசு எழுதித்தந்ததை ஆளுநர் படிக்க வேண்டும் என்பதே விதி, அதுதான் நடைமுறை. அரசு எடுத்த முயற்சிகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு எதிர்க்கட்சி அரசியல் தலைவர் போல ஆளுநர் பேசுகிறார். ஆளுநரிடம் இன்னும் 17 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. ஆளுநர் மாளிகை நிதி தொடர்பாக நிதியமைச்சர் எழுப்பிய கேள்விக்கு இதுவரை உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

click me!