கோவில் நிதியில் வாகனங்கள் வாங்குவதா? அமைச்சர் சேகர்பாபுவுக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!!

By Narendran S  |  First Published May 4, 2023, 4:58 PM IST

அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 


அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆட்சி நிர்வாக ஃபார்முலா- மு.க.ஸ்டாலின்

Latest Videos

கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றமே கூறியிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கோவில் நிதியில் வாகனங்கள் வாங்கியிருக்கிறோம் என்று அந்த விதிமீறலை நியாயப்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: பாதிக்கப்பட்டோருக்குத் தொல்லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரைப் பாதுகாப்பதுமே பா.ஜ.க.வின் அடையாளம்- ஸ்டாலின்

அமைச்சரின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசின் இத்தகைய விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

click me!