தமிழச்சியை கடுமையாக எச்சரித்த பிரான்ஸ் போலீசார்...

First Published Oct 25, 2016, 5:10 AM IST
Highlights


முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து, பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது குறித்து, தமிழச்சியை பிரான்ஸ் போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தன. 

இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக பிரமுகர், காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மூலம், வதந்தி பரப்பியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலையம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் வாழ் தமிழரான தமிழச்சி என்பவர், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து அவர் மீதும் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, மத்திய அரசு, பிரான்ஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு கடும் கண்டனம் தெரிவித்தது. பிரான்ஸ் அரசு, தமிழச்சியின் இணையதளம், செல்போன் பேச்சுக்களை கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய அரசின் இறையாண்மைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக உணர்ந்த பிரான்ஸ் அரசு, தமிழச்சியை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் காவல் துறையின் எச்சரிக்கையை அடுத்து, தற்போது தமிழச்சி அமைதியாக உள்ளதாக தெரிகிறது.

click me!