"சசிகலா முதல்வராவது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது" -தம்பிதுரையே சொல்லிவிட்டார்..!!!

First Published Jan 2, 2017, 12:39 PM IST
Highlights


முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொது செயலாளர் பதவிக்கு சசிகலாவை நியமனம் செய்தனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.

ஆரம்ப நாள் முதலே பொதுசெயலாளர் மட்டுமின்றி தமிழகத்தின் முதல்வர் பதவியையும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன்,கடம்பூர் ராஜூ ஆகியோர் சசிகலா முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலயிலோ அதிமுகவின் மூத்த தலைகளில் ஒருவரான தம்பிதுரையே சசிகலா தமிழகத்தின் முதல்வர் ஆகவேண்டுமென பேட்டி கொடுத்து 

விட்டதால் சசிகலா முதலவராக பதவி ஏற்பது உறுதி என்கின்றனர் அரசியல் வல்லுனர்கள்.

"அதிமுக என்ற இயக்கத்தை மட்டுமல்ல, தமிழகத்தையும் வழிநடத்த சின்னம்மா சசிகலா முதலமைச்சராக வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். அடிப்படையில் அவர் பொது செயலாளராக இருந்தாலும், ஆட்சி பொறுப்பையும் அவர் வழி நடத்துவதே சிறப்பானதாகும்.

கட்சியையும், ஆட்சியையும் ஒருவரிடமே இருந்தால், மக்கள் நலனுக்கு உழைக்க முடியும். மக்கள் நலனுக்காகவே சசிகலாவை ஆட்சிக்கு வரவேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால், அவர் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. என்னை போலவே, அனைத்து மூத்த நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

சசிகலாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நல்ல முடிவு விரைவில் வரும் என நாங்கள் மட்டுமல்ல, மக்களும் எதிர் பார்க்கின்றனர். கட்சியை கட்டி காப்பாற்றி வழி நடத்துவதுபோல், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும்" என்றார்.

click me!